முகப்பு
செய்திகள்

பாராட்டு விழாக்களால் பயிற்சியெடுக்க முடியவில்லை: சர்வதேசப் போட்டியிலிருந்து விலகியது பற்றி நீரஜ் சோப்ரா

ஒரு தங்கத்துடன் திருப்தியடைந்து விடக் கூடாது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:59 AM
பகிர்:

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தடகளப் பிரிவில் இந்திய ஈட்டி எறிதல் வீரா் நீரஜ் சோப்ரா (23) தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்தாா். இறுதிச்சுற்றில் அவா் 87.58 மீட்டா் தூரம் எறிந்து முதலிடம் பிடித்தாா். நீரஜ் சோப்ரா தங்கம் வென்ற ஆகஸ்ட் 7-ம் தேதியை, தேசிய ஈட்டி எறிதல் தினமாக இந்திய தடகள சம்மேளனம் அறிவித்தது.

இந்நிலையில் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் நீரஜ் சோப்ரா கூறியதாவது:

சில நாள்களுக்கு ஒலிம்பிக் பதக்கங்களைக் கொண்டாடிவிட்டு பிறகு அதை நாம் மறக்கக் கூடாது. கவனம் கிடைப்பது நல்லதுதான். ஆனால் இம்மாதக் கடைசியில் டயமண்ட் லீக் போட்டி நடைபெறுகிறது. அதில் கலந்துகொள்ள முடிவு செய்தேன். ஆனால் ஒலிம்பிக் போட்டியிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பியவுடன் ஏராளமான பாராட்டு விழாக்களில் கலந்துகொண்டதால் என்னுடைய பயிற்சி சுத்தமாக நின்றுவிட்டது. தற்போது என்னுடைய உடற்தகுதி முழுமையாக இல்லை. என்னால் ஒழுங்காகப் போட்டியில் கலந்துகொள்ள முடியாது. அதனால் தான் அப்போட்டியில் நான் பங்கேற்கவில்லை. 2-3 போட்டிகளிலாவது பங்கேற்க உள்ளேன். 

இந்திய விளையாட்டுத்துறையில் இதெல்லாம் மாற வேண்டும். எல்லா ஒலிம்பிக் சாம்பியன்களும் டயமண்ட் லீக் போட்டியில் பங்கேற்கிறார்கள். அவர்களுடைய இந்தப் பருவம் இன்னும் முடியவில்லை. தொடர்கிறது. நாம் ஒரு தங்கத்துடன் திருப்தியடைந்து விடக் கூடாது. சர்வதேச அளவில் நாம் யோசிக்க வேண்டும். டயமண்ட் லீக் போன்ற சர்வதேசப் போட்டிகளில் சிறப்பாக விளையாட வேண்டும் என்றார். 

முழு கட்டுரையைப் படிக்க →