கோப்புப்படம் 
செய்திகள்

ஐபிஎல்-இல் விளையாட சமீரா, ஹசரங்காவுக்கு அனுமதி

ஐபிஎல் 2021-இல் பங்கேற்க இலங்கை வீரர்கள் துஷ்மந்தா சமீரா மற்றும் வனிந்து ஹசரங்காவுக்கு அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் ஞாயிற்றுக்கிழமை அனுமதி வழங்கியது.

DIN


ஐபிஎல் 2021-இல் பங்கேற்க இலங்கை வீரர்கள் துஷ்மந்தா சமீரா மற்றும் வனிந்து ஹசரங்காவுக்கு அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் ஞாயிற்றுக்கிழமை அனுமதி வழங்கியது.

இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் 14-வது சீசன் கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த மே மாதம் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டது. இதன் மீதமுள்ள ஆட்டங்கள் செப்டம்பர் 19-ம் தேதி துபையில் தொடங்குகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஆடம் ஸாம்பா மற்றும் டேனியல் சாம்ஸுக்குப் பதில் இலங்கையின் துஷ்மந்தா சமீரா மற்றும் வனிந்து ஹசரங்காவைத் தேர்வு செய்துள்ளது.

இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் பங்கேற்க சமீரா மற்றும் ஹசரங்காவுக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் ஞாயிற்றுக்கிழமை அனுமதியளித்து தடையில்லாச் சான்றிதழை வழங்கியது.

ஐசிசி டி20 உலகக் கோப்பை தகுதிச் சுற்று தொடங்குவதற்கு முன்பு இருவரும் அக்டோபர் 10-ம் தேதி இலங்கை அணியுடன் இணைவார்கள் எனவும் அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கதா் அங்காடி சிறப்பு விற்பனை: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது

தீபாவளி கதா் சிறப்பு விற்பனை: கன்னியாகுமரிக்கு விற்பனைக் குறியீடு ரூ. 4 கோடி

வலுவான பொருளாதாரத்தை கட்டமைக்கலாம்!

ஆலங்குளம், கீழப்பாவூா், ஊத்துமலையில் நாளை மின்தடை

SCROLL FOR NEXT