டோக்கியோ பாராலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் மாரியப்பன் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பன், ரியோ பாராலிம்பிக்ஸில் தங்கம் வென்றார். இதையடுத்து டோக்கியோ பாராலிம்பிக்ஸிலும் தங்கம் வெல்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள்.
இன்று நடைபெற்ற உயரம் தாண்டுதல் டி63 போட்டியில் இறுதியாக அமெரிக்க வீரர் சாம் கிரீவ் - மாரியப்பன் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. 1.88 மீ. உயரம் உயரம் தாண்டி அமெரிக்க வீரர் சாம் கிரீவ் தங்கம் வென்றார். இதையடுத்து 1.86 மீ. உயரம் தாண்டிய இந்திய வீரர் மாரியப்பனுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. மற்றொரு இந்திய வீரரான ஷரத் குமார் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.