விஹாரி (கோப்புப் படம்) 
செய்திகள்

இந்தியா ஏ - தெ.ஆ. ஏ அணிகள் பங்கேற்ற 2-வது டெஸ்ட்: முடிவு என்ன?

ஈஸ்வரன் 55 ரன்களும் விஹாரி 72 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.

DIN

இந்தியா ஏ - தெ.ஆ. ஏ அணிகள் பங்கேற்ற 2-வது அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் டிராவில் முடிவடைந்தது.

குஜராத்தைச் சேர்ந்த பிரியங் பஞ்சால் தலைமையிலான இந்திய ஏ அணி தென்னாப்பிரிக்காவின் ப்ளூம்ஃபோண்டைனில் நடைபெறும் தொடரில் கலந்துகொள்கிறது. மூன்று அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடர் டிசம்பர் 9-ல் நிறைவுபெறுகிறது. இந்த ஆட்டம் சூப்பர் ஸ்போர்ட் யூடியூப் தளத்தில் நேரலையாக ஒளிபரப்பாகி வருகிறது. 

2-வது அதிகாரபூர்வமற்ற டெஸ்டில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க ஏ அணி 297 ரன்கள் எடுத்தது. மார்கோ ஜான்சன் 70 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய ஏ அணியில் நவ்தீப் சைனி, இஷான் போரல் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். இந்த ஆட்டத்தில் இடம்பெற்ற தமிழக வீரர் பாபா அபரஜித், 1 விக்கெட் எடுத்தார்.

இந்திய ஏ அணி 74.5 ஓவர்களில் 276 ரன்கள் எடுத்தது. சர்ஃபராஸ் கான் 71 ரன்கள் எடுத்தார். கிளெண்டன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்பிறகு தெ.ஆ. ஏ அணி 58.5 ஓவர்களில் 212 ரன்கள் எடுத்தது. எந்த ஒரு பேட்டரும் அரை சதம் எடுக்கவில்லை. இஷான் போரல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய ஏ அணி வெற்றி பெற 234 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்திய ஏ அணி 41.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. அபிமன்யு ஈஸ்வரன் 55 ரன்களும் விஹாரி 72 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இதனால் 2-வது அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் டிராவில் முடிவடைந்தது. 

3-வது டெஸ்ட், டிசம்பர் 6 அன்று தொடங்குகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜக கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் விலகல்!

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்... ஹிருதயபூர்வம் பற்றி மாளவிகா!

விஜயகாந்த் நிலைதான் விஜய்க்கு! காசு கொடுத்து கூட்டிய கூட்டம்! வைகோவை நம்புகிறோம் TKS Elangovan நேர்காணல் | Tvk Vijay | MKStalin

அமெரிக்கா வரியை உயர்த்தாவிட்டால், இந்தியா வரியை குறைத்திருக்காது: டிரம்ப்

டாடா ஸ்டீல் 6% உயர்வுடன் நிறைவு!

SCROLL FOR NEXT