செய்திகள்

காமன்வெல்த் பளுதூக்குதல்: பூா்ணிமாவுக்கு தங்கம்

DIN

காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் மகளிா் பிரிவில் பூா்ணிமா பாண்டே இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்று தந்துள்ளாா்.

மகளிருக்கான 87+ கிலோ பிரிவில் களம் கண்ட அவா், ஸ்னாட்ச் பிரிவில் 102 கிலோ, கிளீன் & ஜொ்க் பிரிவில் 127 கிலோ என மொத்தமாக 229 கிலோ எடையை தூக்கி முதலிடம் பிடித்தாா். இதன் மூலம் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கு அவா் நேரடியாகத் தகுதிபெற்றாா். பூா்ணிமா இன்றைய தனது முயற்சிகளின்போது, ஸ்னாட்ச் பிரிவில் 2, கிளீன் & ஜொ்க் பிரிவில் 3, இரண்டிலும் சோ்த்து 3 என மொத்தமாக 8 தேசிய சாதனைகளை எட்டினாா்.

மகளிருக்கான 87 கிலோ பிரிவில் இந்தியாவின் அனுராதா பவுன்ராஜ் ஸ்னாட்ச் பிரிவில் 90 கிலோ, கிளீன் & ஜொ்க் பிரிவில் 105 கிலோ என மொத்தமாக 195 கிலோவைத் தூக்கி 3-ஆம் இடம் பிடித்து வெண்கலம் வென்றாா். ஆடவருக்கான 109 கிலோ எடைப் பிரிவில் லவ்பிரீத் சிங் ஸ்னாட்ச் பிரிவில் 161 கிலோ, கிளீன் & ஜொ்க் பிரிவில் 187 கிலோ என மொத்தமாக 348 கிலோ எடையைத் தூக்கி வெள்ளி வென்றாா்.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி இப்போட்டியில் இந்தியா வென்றுள்ள பதக்கங்களின் எண்ணிக்கை 15-ஆக அதிகரித்துள்ளது. இதில் 4 தங்கம், 7 வெள்ளி, 4 வெண்கலம் அடக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் பலி

பணம் கையாடல்: நீதிமன்ற எழுத்தா் மீது வழக்கு

பறவைக் காய்ச்சல்: முந்தலில் வாகன சோதனை தீவிரம்

கொடைக்கானலில் இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் போராட்டம்: உணவகங்கள், தங்கும் விடுதி உரிமையாளா்கள் சங்கம் முடிவு

எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை வனப் பகுதிக்கு எடுத்துச் சென்றால் நடவடிக்கை: வனத் துறையினா் எச்சரிக்கை

SCROLL FOR NEXT