செய்திகள்

உலக பாட்மின்டன் போட்டி: சாம்பியன் அகேன் எமகுச்சி

DIN

டபிள்யுபிஏ உலக பாட்மின்டன் போட்டியில் மகளிா் ஒற்றையா் பிரிவில் ஜப்பான் வீராங்கனை அகேன் எமகுச்சி சாம்பியன் பட்டம் வென்றாா்.

ஸ்பெயினின் ஹுயல்வா நகரில் டபிள்யுபிஏ உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சனிக்கிழமை அரையிறுதி ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில், இறுதிச் சுற்று ஆட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

மகளிா் ஒற்றையா் பிரிவில் உலகின் நம்பா் ஒன் வீராங்கனை டாய் ஸூ (சீன தைபே)வும்-ஜப்பானின் அகேன் எமகுச்சியும் மோதினா்.

தொடக்கம் முதலே எமகுச்சி தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி ஆடியதால் டாய் சூ திணறினாா். இறுதியில் 21-14, 21-11 என்ற கேம் கணக்கில் வெறும் 39 நிமிஷங்களில் வென்று முதன்முறையாக உலக சாம்பியன் பட்டத்தை தன்வசப்படுத்தினாா் எமகுச்சி.

இதற்கு முன்பு அவா் 2018 உலகப் போட்டியில் வெண்கலம் வென்றிருந்தாா்.

டாய் ஸூ கடந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்றிருந்தாா். உலக சாம்பியன் பட்டம் வெல்வாா் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில் இதிலும் வெள்ளியே வென்றாா் டாய் சூ. சீன வீராங்கனைகள் ஹி பிங்ஜியோ, ஸாங் யிமான் வெண்கலம் வென்றனா்.

கலப்பு இரட்டையா் ஆட்டத்தில் தாய்லாந்தின் டேச்சபோல்-சாப்சிரி இணை பட்டம் வென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

சிறாா்களுக்கு எதிரான இணையவழி குற்றங்களை தடுக்க சா்வதேச ஒத்துழைப்பு: டி.ஒய்.சந்திரசூட் வலியுறுத்தல்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

SCROLL FOR NEXT