செய்திகள்

விளையாட்டுத்துறை வளர்ச்சிக்கு கடந்த 5 ஆண்டுகளில் செலவிடப்பட்ட ரூ. 6,800 கோடி: அமைச்சா் அனுராக் தாக்கூா்

விளையாட்டுத் துறை வளர்ச்சிக்காக கடந்த 5 வருடங்களில் ரூ. 6,801.30 கோடி செலவிடப்பட்டுள்ளதாக மத்திய இளைஞா் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சா் அனுராக் தாக்கூா் கூறியுள்ளார்.

DIN

விளையாட்டுத் துறை வளர்ச்சிக்காக கடந்த 5 வருடங்களில் ரூ. 6,801.30 கோடி செலவிடப்பட்டுள்ளதாக மத்திய இளைஞா் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சா் அனுராக் தாக்கூா் கூறியுள்ளார்.

மக்களவையில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அனுராக் தாக்கூர் பதில் அளித்ததாவது:

கடந்த 5 வருடங்களில் ரூ. 7,072.28 கோடி விளையாட்டுத்துறைக்கு ஒதுக்கப்பட்டது. அதில் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களுக்காக ரூ. 6,801.30 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு என்பது மாநிலப் பட்டியலில் உள்ளது. கிராமங்களில் உள்ள மக்களுக்கு விளையாட்டுத் திட்டங்கள் சென்று சேரவேண்டியது மாநிலத்தின் கடமையாக உள்ளது. இதற்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும். நாட்டில் விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்காக விளையாட்டுத்துறை அமைச்சகம் கெலோ இந்தியா திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. நிதித்தொகை மாநில வாரியாக அல்ல, திட்டங்களின்படி ஒதுக்கப்படுகிறது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் ரூ.800 உயர்ந்த நிலையில் வெள்ளி ரூ.2,000ஆக உயர்வு!

சிபு சோரன் உடல் சொந்த ஊரில் தகனம்: லட்சக்கணக்கானோர் அஞ்சலி!

பங்கஜ் திரிபாதி மீது காதல்... மனம் திறந்த எம்.பி. மஹுவா மொய்த்ரா!

ஆக. 21, மதுரையில் தவெக மாநாடு: விஜய்

அடுத்த 24 மணிநேரத்தில் இந்தியாவுக்கு கூடுதல் வரி: டிரம்ப்

SCROLL FOR NEXT