செய்திகள்

4-ம் நாள்: 4 விக்கெட்டுகளை இழந்தது தென் ஆப்பிரிக்கா

இந்தியாவுடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் 4-ம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்துள்ளது.

DIN


இந்தியாவுடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் 4-ம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்துள்ளது.

தென் ஆப்பிரிக்கா, இந்தியா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் செஞ்சூரியனில் டிசம்பர் 26-ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்று முதல் பேட்டிங் செய்த இந்திய அணி 327 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 197 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

130 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்தியா 174 ரன்களுக்கு ஆட்டமிழந்து தென் ஆப்பிரிக்காவுக்கு 305 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

இதையடுத்து, தென் ஆப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. எய்டன் மார்கிரமை 1 ரன்னுக்கு போல்டாக்கினார் முகமது ஷமி. கீகன் பீட்டெர்சன் ஓரளவு தாக்குப்பிடித்து 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ராசி வாண்டர் டுசனும் தாக்குப்பிடித்து விளையாடி 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதனால், நைட் வாட்ச்மேனாக கேசவ் மகாராஜ் களமிறக்கப்பட்டார். அவரும் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்ததுடன் 4-ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

கேப்டன் டீன் எல்கர் அரைசதம் அடித்து 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

4-ம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்துள்ளது. கடைசி நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க வெற்றிக்கு 211 ரன்கள் தேவைப்படுகின்றன. இந்திய அணியின் வெற்றிக்கு 6 விக்கெட்டுகள் தேவைப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தல போல வருமா... மறுவெளியீட்டில் அசத்தும் அஜித்தின் அட்டகாசம்!

2026ல் ஆட்சி பீடத்தில் விஜய்! தவெகவில் இணையும் அதிமுகவினர்? - செங்கோட்டையன் பேட்டி

டிட்வா புயல் எங்கே, எப்போது கரையை கடக்கும்? முழு விவரம்

தாதா பிணத்துடன் ராதிகா குடும்பம்! ரிவால்வர் ரீட்டா - திரை விமர்சனம்!

புணேவில் இருந்து கடத்தி வரப்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல்

SCROLL FOR NEXT