ரிஷப் பந்த் (கோப்புப் படம்) 
செய்திகள்

தோனியின் சாதனையை முந்தினார் ரிஷப் பந்த்

தென்னப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் தோனியின் சாதனையை முந்தினார் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த்.

DIN

தென்னப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் தோனியின் சாதனையை முந்தினார் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த்.

இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட், செஞ்சுரியனில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 105 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் எடுத்தது. ராகுல் 123, மயங்க் அகர்வால் 60, ரஹானே 48 ரன்கள் எடுத்தார்கள். தெ.ஆ. தரப்பில் என்கிடி 6 விக்கெட்டுகளும் ரபாடா 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். 

இந்திய அணி சிறப்பாகப் பந்துவீசியதால் தெ.ஆ. அணி முதல் இன்னிங்ஸில் 62.3 ஓவர்களில் 197 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பவுமா 52 ரன்கள் எடுத்தார். இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷமி 5 விக்கெட்டுகளும் பும்ரா, தாக்குர் தலா 2 விக்கெட்டுகளும் சிராஜ் 1 விக்கெட்டும் எடுத்தார்கள். 3-ம் நாள் முடிவில் இந்திய அணி 6 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 16 ரன்கள் எடுத்துள்ளது. ராகுல் 5, தாக்குர் 4 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். இந்திய அணி 9 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 146 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 

இந்நிலையில் தெ.ஆ. அணியின் முதல் இன்னிங்ஸில் 4 கேட்சுகள் பிடித்தார் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த். இத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 டிஸ்மிஸல்களைப் பூர்த்தி செய்தார்.
 
இதற்கு முன்பு இந்திய முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியும் சஹாவும் 36 டெஸ்டுகளில் 100 டிஸ்மிஸல்களை நிகழ்த்தினார்கள். ஆனால் 24 வயது ரிஷப் பந்த், தனது 26-வது டெஸ்டிலேயே இந்த இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளார். 

100 டெஸ்ட் டிஸ்மிஸல்கள் - இந்திய விக்கெட் கீப்பர்கள்

26 ரிஷப் பந்த்
36 தோனி/சஹா
39 கிரண் மோரே
41 நயன் மோங்கியா
42 சையத் கிர்மானி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கையில் மழை, நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 56 ஆக உயர்வு!

ஃபோர்ப்ஸ் உலக பணக்காரர்கள் பட்டியல் வெளியீடு!

கம்மின்ஸ், ஹேசில்வுட் இல்லை: 2-ஆவது போட்டிக்கான ஆஸி. அணி!

டிட்வா புயல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேட்டி

அரியலூர் உள்பட 5 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்!

SCROLL FOR NEXT