செய்திகள்

யு19 ஆசியக் கோப்பை: இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா

DIN


19 வயதுக்குள்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதி ஆட்டத்தில் வங்கதேசத்தை 103 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

19 வயதுக்குள்பட்டோருக்கான ஆசியக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா, வங்கதேசம் அணிகள் ஷார்ஜாவில் வியாழக்கிழமை மோதின. டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி முதல் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 243 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக ஷைக் ரஷீத் ஆட்டமிழக்காமல் 90 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து, வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேசம் சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அரிஃபுல் இஸ்லாம் எடுத்த 42 ரன்கள்தான் வங்கதேசத்தின் அதிகபட்சமாக ஸ்கோர். 38.2 ஓவர்களில் வங்கதேச அணி 140 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதன்மூலம், 103 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலைகார முதலையைக் கொன்று விருந்து!

மத்தியப் பிரதேசத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்த 11 பேரின் வீடுகள் இடிப்பு!

அதிகரிக்கும் மகாராஜா காட்சிகள்!

கோயிலுக்குள் பசுவின் துண்டித்த தலை வீச்சு! மத்தியப் பிரதேசத்தில் 4 பேர் கைது

பக்ரீத் பண்டிகை: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

SCROLL FOR NEXT