பிரபல நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
37 வயது ராஸ் டெய்லர் 2006 முதல் நியூசிலாந்து அணிக்காக விளையாடி 110 டெஸ்டுகள், 233 ஒருநாள், 102 டி20 ஆட்டங்களில் இடம்பெற்றுள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த நியூசிலாந்து வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். டெஸ்டில் 19 சதங்களுடன் 7584 ரன்கள் எடுத்துள்ளார்.
இந்நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் கடைசியாக விளையாடி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும் ஆஸ்திரேலியா, நெதர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்களில் கடைசியாக விளையாடி ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தனது கடைசி டெஸ்டை ஜனவரி 9 அன்றும் கடைசி ஒருநாள் ஆட்டத்தை ஏப்ரல் 4 அன்றும் விளையாடவுள்ளார். நவம்பர் 2020-க்குப் பிறகு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் டெய்லர் விளையாடவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.