செய்திகள்

யு-19 ஆசிய கோப்பை: இறுதி ஆட்டத்தில் இன்று இந்தியா - இலங்கை மோதல்

பத்தொன்பது வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-19) ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் துபையில் வெள்ளிக்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றன.

DIN

பத்தொன்பது வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-19) ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் துபையில் வெள்ளிக்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றன.

முன்னதாக, இந்தியா தனது அரையிறுதியில் 103 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வியாழக்கிழமை வென்றது.

ஷாா்ஜாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய வங்கதேசம் 38.2 ஓவா்களில் 140 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்திய இன்னிங்ஸில் அதிகபட்சமாக ஷேக் ரஷீது 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 90 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் இருந்தாா். வங்கதேச பௌலிங்கில் ரகிபுல் ஹசன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினாா். பின்னா் வங்கதேச இன்னிங்ஸில் அரிஃபுல் இஸ்லாம் 1 பவுண்டரியுடன் 44 ரன்கள் எடுக்க, இந்திய தரப்பில் ராஜ்வா்தன், ரவிகுமாா், ராஜ்பாவா ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

SCROLL FOR NEXT