முகப்பு
கோப்புப்படம்
செய்திகள்

ஹர்பஜனாக மாறிய ரோஹித் சர்மா (விடியோ)

​இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் 2-வது நாளில் ஹர்பஜன் சிங்கைப் போல் ரோஹித் சர்மா பந்துவீசினார்.

செய்திகள்

ஹர்பஜனாக மாறிய ரோஹித் சர்மா (விடியோ)

​இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் 2-வது நாளில் ஹர்பஜன் சிங்கைப் போல் ரோஹித் சர்மா பந்துவீசினார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:28 PM
கோப்புப்படம்
பகிர்:


இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் 2-வது நாளில் ஹர்பஜன் சிங்கைப் போல் ரோஹித் சர்மா பந்துவீசினார்.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்து வரும் இங்கிலாந்து 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 555 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.

இந்த ஆட்டத்தில் 5 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும் இந்திய அணியால் பெரிதளவில் விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை. இதுபோன்ற தருணத்தில் அவ்வப்போது பகுதிநேர பந்துவீச்சாளர்களை பந்துவீச அழைப்பது வழக்கம்.

இந்த வகையில் ரோஹித் சர்மாவிடம் பந்தை வழங்கினார் கேப்டன் விராட் கோலி. இந்த இன்னிங்ஸில் ரோஹித் 2 ஓவர்களை வீசினார். அப்போது முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் பாணியில் பந்துவீசி ரோஹித் சர்மா அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

சமூக ஊடகங்களிலும் இந்த விடியோ பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →