ஐபிஎல் ஏலம்: எந்த அணிக்கும் தேர்வாகாத ஹர்பஜன் சிங்!
ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கேவின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்கை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை.
செய்திகள்ஐபிஎல் ஏலம்: எந்த அணிக்கும் தேர்வாகாத ஹர்பஜன் சிங்!
ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கேவின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்கை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை.
ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கேவின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்கை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை.
24 வயது ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜை ரிச்சர்ட்சனை ரூ. 14 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது பஞ்சாப் அணி.
தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸை ரூ. 16.25 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. ஐபிஎல் வரலாற்றில் ஏலத்தில் அதிக விலைக்குத் தேர்வான வீரர் என்கிற பெருமையை அவர் அடைந்துள்ளார்.
இங்கிலாந்து வீரர் டேவிட் மலானை ரூ. 1.50 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது பஞ்சாப் அணி.
இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயீன் அலியை ரூ. 7 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!
ஆஸி. வீரர் மேக்ஸ்வெல்லை ரூ. 14.25 கோடிக்குத் தேர்வு செய்தது ஆர்சிபி அணி. சிஎஸ்கேவுடன் கடுமையாகப் போட்டியிட்டு மேக்ஸ்வெல்லை ஆர்சிபி தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் ஏலம்
பியூஷ் சாவ்லா - ரூ. 2.40 கோடி
ஹர்பஜன் சிங் - தேர்வாகவில்லை
இஷ் சோதி - தேர்வாகவில்லை
அடில் ரஷித் - தேர்வாகவில்லை
ராகுல் சர்மா - தேர்வாகவில்லை
கைஸ் அகமது - தேர்வாகவில்லை
முஜீப் உர் ரஹ்மான் - தேர்வாகவில்லை
*
ஆடம் மில்ன் - ரூ. 3.20 கோடி - மும்பை
முஸ்தாபிசுர் ரஹ்மான் - ரூ. 1 கோடி - ராஜஸ்தான்
ஜை ரிச்சர்ட்சன் - ரூ. 14 கோடி - பஞ்சாப்
நாதன் கோல்டர் நைல் - ரூ. 5 கோடி - மும்பை
உமேஷ் யாதவ் - ரூ. 1 கோடி - தில்லி
ஷெல்டன் காட்ரெல் - தேர்வாகவில்லை
கிளென் பிலிப்ஸ் - தேர்வாகவில்லை
அலெக்ஸ் கேரி - தேர்வாகவில்லை
சாம் பில்லிங்ஸ் - தேர்வாகவில்லை
குசால் பெரேரா - தேர்வாகவில்லை
*
கிறிஸ் மோரிஸ் - 16.25 - ராஜஸ்தான் ராயல்ஸ்
ஷிவம் டுபே - ரூ. 4.40 கோடி - ராஜஸ்தான் ராயல்ஸ்
டேவிட் மலான் - ரூ. 1.50 கோடி - பஞ்சாப்
மொயீன் அலி - ரூ. 7 கோடி - சிஎஸ்கே
மேக்ஸ்வெல் - ரூ. 14.25 கோடி - ஆர்சிபி
சகிப் அல் ஹசன் - 3.20 கோடி - கேகேஆர்
கெதர் ஜாதவ் - தேர்வாகவில்லை
*
ஆரோன் ஃபிஞ்ச் - தேர்வாகவில்லை
அலெக்ஸ் ஹேல்ஸ் - தேர்வாகவில்லை
எவின் லூயிஸ் - தேர்வாகவில்லை
கருண் நாயர் - தேர்வாகவில்லை
ஜேசன் ராய் - தேர்வாகவில்லை
ஸ்டீவ் ஸ்மித் - ரூ. 2 கோடி - தில்லி
ஹனுமா விஹாரி - தேர்வாகவில்லை
*
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான வீரா்கள் ஏலம் சென்னையில் இன்று நடைபெற்று வருகிறது.
கரோனா சூழல் காரணமாக சுருக்கமாக நடத்தப்படும் இந்த ஏலத்தில் 292 வீரா்கள் இடம்பெறுகிறார்கள். அதில் 164 போ் இந்தியா்கள்; 125 போ் வெளிநாட்டு வீரா்கள். 3 போ் அசோசியேட் நாடுகளின் வீரா்கள்.
292 வீரர்களில் இருந்து 22 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 61 வீரர்களை அணிகள் தேர்வு செய்யவேண்டும்.
8 அணிகளிலுமாக மொத்தம் 61 இடங்கள் காலியாக உள்ளன. அதிகபட்சமாக ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரில் 11 இடங்களும், குறைந்தபட்சமாக சன்ரைசா்ஸ் ஹைதராபாதில் 3 இடங்களும் காலியாக உள்ளன. கையிருப்பு தொகையைப் பொருத்தவரை, அதிகபட்சமாக பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் ரூ.53.20 கோடியும், குறைந்தபட்சமாக சன்ரைசா்ஸ் ஹைதராபாதிடம் ரூ.10.75 கோடி உள்ளன.
அடிப்படைத் தொகை ரூ. 2 கோடியில் ஹர்பஜன் சிங், கெதர் ஜாதவ் உள்பட 10 வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள். ரூ. 1.5 கோடியில் 12 வெளிநாட்டு வீரர்களும் ரூ. 1 கோடியில் 2 இந்திய வீரர்கள் உள்பட 11 வீரர்களும் இடம்பெற்றுள்ளார்கள். ஏலப்பட்டியலில் ஷாருக் கான், எம். சித்தார்த், ஹரி நிஷாந்த், சோனு யாதவ், அருண் கார்த்திக், ஜி. பெரியசாமி, பாபா அபராஜித், எம். முகமது ஆகிய 8 தமிழக வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள்.