செய்திகள்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பெயர் மாற்றம்: அதிகாரபூர்வ அறிவிப்பு

கடந்த 13 வருடங்களில் இருமுறை மட்டுமே பிளேஆஃப் சுற்றுக்கு பஞ்சாப் அணி தகுதி பெற்றுள்ளது.

DIN

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பெயர் பஞ்சாப் கிங்ஸ் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

கடந்த 13 வருடங்களில் இருமுறை மட்டுமே பிளேஆஃப் சுற்றுக்கு பஞ்சாப் அணி தகுதி பெற்றுள்ளது. கடந்த வருடம் ஆறாம் இடத்தைப் பிடித்தது. 2008, 2014 ஆகிய வருடங்களில் மட்டுமே பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றதால் அதன் பெயரை மாற்ற அணி உரிமையாளர்களான நெஸ் வாடியா, நடிகை ப்ரீத்தி ஜிந்தா, கர்ண் பால், மோஹித் பர்மன் ஆகியோர் முடிவு செய்தார்கள்.

அதன்படி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பெயர் பஞ்சாப் கிங்ஸ் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அதன் இலச்சினை வடிவத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

2018-ல் தில்லி டேர்டெவில்ஸ் அணியின் பெயர் தில்லி கேபிடல்ஸ் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து பஞ்சாப் அணி பெயர் மாற்றம் செய்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தப் பார்வை... ஸ்ருஷ்டி பன்னாட்டி!

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

புரியில் 15 வயது சிறுமி மரண வழக்கில் திடீர் திருப்பம்! போலீஸ் விளக்கம்!

SCROLL FOR NEXT