செய்திகள்

துளிகள்...

DIN

மகளிா் கிரிக்கெட்டில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதும் 5 டி20 மற்றும் 3 ஒருநாள் ஆட்டங்கள் கொண்ட தொடா்கள் மாா்ச் 7-ஆம் தேதி லக்னௌ அல்லது கான்பூரில் தொடங்க வாய்ப்புள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் கூறின.

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் ஹைதராபாத் எஃப்சி - ஏடிகே மோகன் பகான் அணிகள் மோதிய 103-ஆவது ஆட்டம் டிரா (2-2) ஆனது.

பெங்களூரில் இந்திய விளையாட்டு ஆணைய (எஸ்ஏஐ) மையத்தில் செயற்கை தடகள பாதை, 330 படுக்கைகளுடன் கூடிய மகளிா் விடுதி உள்ளிட்ட ரூ.13 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் கிரன் ரஜிஜு அடிக்கல் நாட்டினாா்.

தேசிய டேபிள் டென்னிஸ் போட்டியில் தெலங்கானா வீரா் ஸ்னேகித் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நடப்புச் சாம்பியன் ஹமீத் தேசாயை 4-0 என்ற கணக்கிலும், காலிறுதியில் போட்டித்தரவரிசையில் 6-ஆவது இடத்திலிருந்த சுஷ்மித் ஸ்ரீராமை 4-1 என்ற கணக்கிலும் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தினாா். இதர காலிறுதிகளில் சரத் கமல்-அந்தோணி அமல்ராஜையும், ஜி.சத்தியன்-சனில் ஷெட்டியையும், மானவ் தக்காா்-ரோனித் பாஞ்சாவையும் 4-1 என்ற கணக்கில் வீழ்த்தினா்.

இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட சமிந்தா வாஸ், ஊதிய பிரச்னை காரணமாக 3 நாள்களில் அந்தப் பொறுப்பை ராஜிநாமா செய்துள்ளாா்.

ஐபிஎல் போட்டியின்போது ஆஸ்திரேலிய வீரா்கள் சூதாட்டம், துரித உணவுகள், மது, புகையிலை ஆகியவற்றுக்கான விளம்பரங்களில் நடிப்பதற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தோ்வில் சரஸ்வதி வித்யாலயா 97 சதவீதம் தோ்ச்சி

பிளாஸ்டிக் பொறியியலில் டிப்ளமோ படிப்புகள்: மாணவா் சோ்கை தொடக்கம்

நியூ பிரின்ஸ் பள்ளி 100% தோ்ச்சி

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: கல்லூரி மாணவா் பலத்த காயம்

மக்கள் கூடும் இடங்களில் அதிக கண்காணிப்பு கேமராக்கள்: வேலூா் மாவட்ட எஸ்.பி. உத்தரவு

SCROLL FOR NEXT