செய்திகள்

அஸ்வினின் சாதனையைக் குறைத்து மதிப்பிடுவதா?: சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள யுவ்ராஜ் சிங்கின் ட்வீட்!

DIN

ஆமதாபாத் ஆடுகளம் குறித்து யுவ்ராஜ் சிங் கருத்து தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணிக்கு எதிராக 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. 2-வது டெஸ்டை 317 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி தொடரை 1-1 என சமன் செய்தது. 3-வது டெஸ்ட், பகலிரவு ஆட்டமாக ஆமதாபாத்தில் நடைபெற்றது. 

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியில் பர்ன்ஸ், லாரன்ஸ், ஸ்டோன், மொயீன் அலிக்குப் பதிலாக ஆண்டர்சன், ஆர்ச்சர், பேர்ஸ்டோவ், கிராவ்லி ஆகியோரும் இந்திய அணியில் சிராஜ், குல்தீப் யாதவுக்குப் பதிலாக பும்ரா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் இடம்பெற்றார்கள். இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா தனது 100-வது டெஸ்டை விளையாடினார்.

முற்றிலும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாகவே இருந்த ஆமதாபாத் ஆடுகளத்தில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்தை 112 ரன்களுக்கு கட்டுப்படுத்திய இந்தியா, ஜோ ரூட் 5 விக்கெட்டுகள் எடுத்து அற்புதமாகப் பந்துவீசியதால் முதல் இன்னிங்ஸில் 145 ரன்களுக்கு வீழ்ந்தது. 2-ஆவது இன்னிங்ஸில் இங்கிலாந்தை 81 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா, 49 ரன்கள் வெற்றி இலக்கை 2-ஆம் நாளிலேயே எட்டி ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. 11 விக்கெட்டுகள் எடுத்த அக்ஸா் படேல் ஆட்டநாயகன் ஆனாா். 

மொத்தம் 4 ஆட்டங்களைக் கொண்ட இந்தத் தொடா், தற்போது 2-1 என இந்தியாவுக்குச் சாதகமாக உள்ளது. 4-வது டெஸ்ட், மார்ச் 4 அன்று ஆமதாபாத்தில் தொடங்குகிறது.

இந்த டெஸ்டில் தனது 400-வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தினார் தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின். இதற்கு கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் ரசிகர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.

ஆமதாபாத் டெஸ்ட் முடிந்த பிறகு இந்திய முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங், ட்விட்டரில் கூறியதாவது:

2 நாள்களில் முடிந்துவிட்டது. இது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு நல்லதா எனத் தெரியவில்லை. அனில் கும்ப்ளேவும் ஹர்பஜன் சிங்கும் இதுபோன்ற ஆடுகளத்தில் பந்துவீசியிருந்தால் ஆயிரம் மற்றும் 800 விக்கெட்டுகளை எடுத்திருப்பார்கள். எனினும் அக்‌ஷர் படேலுக்கு வாழ்த்துகள். என்ன ஒரு பந்துவீச்சு. அஸ்வின், இஷாந்த் சர்மாவுக்கு வாழ்த்துகள் என்றார். 

யுவ்ராஜ் சிங்கின் இந்தக் கருத்தை பல ரசிகர்கள் விரும்பவில்லை. ஆமதாபாத் ஆடுகளத்தை முன்வைத்து அஸ்வினின் சாதனையைக் குறைத்து மதிப்பிடுவதாக யுவ்ராஜ் சிங்கின் ட்வீட்டுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதையல் எடுத்து தருவதாக ரூ. 6 லட்சம் மோசடி: 2 பேர் கைது!

மலர் அங்கி அலங்காரத்தில் அருள்பாலித்த கெளமாரியம்மன்!

பிரதமர் மோடிக்கு எதிரான புகார்: 1 வாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் பதிலளிக்கப்படும் -பாஜக

திருமண விழாவிற்குச் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்: 6 பேர் பலி!

கோவை தோ்தல் முடிவை வெளியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி

SCROLL FOR NEXT