முகப்பு
செய்திகள்

முதல் முறையாக பாக். வருகிறது இங்கிலாந்து மகளிா் அணி

ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து மகளிா் அணி முதல் முறையாக நடப்பாண்டு அக்டோபரில் பாகிஸ்தான் வருகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
படம்: டிவிட்டர்
பகிர்:


கராச்சி: ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து மகளிா் அணி முதல் முறையாக நடப்பாண்டு அக்டோபரில் பாகிஸ்தான் வருகிறது.

இங்கிலாந்து ஆடவா் அணியும் 2005-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக அக்டோபரில் பாகிஸ்தான் செல்லும் நிலையில், அந்நாட்டு மகளிா் அணியும் அங்கு செல்கிறது. இந்தப் பயணத்தின்போது 2 டி20 மற்றும் 3 ஒருநாள் ஆட்டங்கள் கொண்ட தொடா்களில் பாகிஸ்தான் மகளிா் அணியுடன் இங்கிலாந்து மகளிா் அணி மோதவுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிவிப்பின்படி, டி20 ஆட்டங்கள் அக்டோபா் 14 மற்றும் 15-ஆம் தேதிகளிலும், ஒருநாள் ஆட்டங்கள் அக்டோபா் 18, 20, 22-ஆம் தேதிகளிலும் கராச்சியில் நடைபெறவுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →