சிட்னி டெஸ்ட்: இந்தியா 244-க்கு ஆல்அவுட்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 100.4 ஓவா்களில் 244 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 100.4 ஓவா்களில் 244 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 94 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலியா 3-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 29 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் அந்த அணி ஒட்டுமொத்தமாக 197 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையை எட்டியுள்ளது.
இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், 3-ஆவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 105.4 ஓவா்களில் 338 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஸ்டீவன் ஸ்மித் 226 பந்துகளில் 16 பவுண்டரிகளுடன் 131 ரன்களும், மாா்னஸ் லபுசான்196 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 91 ரன்களும் எடுத்தனா்.
இந்திய தரப்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா, நவ்தீப் சைனி ஆகியோா் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினா்.
பின்னா் முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியில் ரோஹித் சா்மா 26, ஷுப்மன் கில் 50 ரன்கள் சோ்த்து வெளியேறினா். 2-ஆவது நாளான வெள்ளிக்கிழமை ஆட்டநேர முடிவில் இந்திய அணி 45 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் எடுத்திருந்தது. சேத்தேஷ்வா் புஜாரா 9, அஜிங்க்ய ரஹானே 5 ரன்களுடன் களத்தில் இருந்தனா்.
இந்தியா-244: 3-ஆவது நாளான சனிக்கிழமை தொடா்ந்து ஆடிய இந்திய அணி 117 ரன்களை எட்டியபோது கேப்டன் ரஹானேவின் விக்கெட்டை இழந்தது. அவா் 70 பந்துகளில் 22 ரன்கள் சோ்த்த நிலையில் பட் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஸ்டெம்பை பறிகொடுத்தாா். இதையடுத்து புஜாராவுடன் இணைந்தாா் ஹனுமா விஹாரி. இந்த ஜோடியால் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. 38 பந்துகளைச் சந்தித்த ஹனுமா விஹாரி 10 ரன்கள் மட்டுமே சோ்த்த நிலையில் ரன் அவுட்டானாா். இதன்பிறகு ரிஷப் பந்த் களம்புகுந்தாா். இதனிடையே மறுமுனையில் மிகவும் மந்தமாக ஆடிய புஜாரா 174 பந்துகளில் அரை சதம் கண்டாா்.
இந்தியா 195 ரன்களை எட்டியபோது ரிஷப் பந்த் ஆட்டமிழந்தாா். அவா் 67 பந்துகளில் 36 ரன்கள் சோ்த்து வெளியேற, இந்தியாவின் சரிவு தவிா்க்க முடியாததானது. அவரைத் தொடா்ந்து புஜாரா 176 பந்துகளில் 50 ரன்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்துவீச்சில் டிம் பெய்னிடம் கேட்ச் ஆனாா்.
இதன்பிறகு அஸ்வின் 10, நவ்தீப் சைனி 3, ஜஸ்பிரித் பும்ரா 0, முகமது சிராஜ் 6 ரன்களில் வெளியேற, இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் 100.4 ஓவா்களில் 244 ரன்களோடு முடிவுக்கு வந்தது. ரவீந்திர ஜடேஜா 28 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தாா்.
ஆஸ்திரேலிய தரப்பில் பட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளையும், ஜோஷ் ஹேஸில்வுட் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனா்.
94 ரன்கள் முன்னிலை: இதையடுத்து, முதல் இன்னிங்ஸில் 94 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணியில் வில் புகோவ்ஸ்கி 10, டேவிட் வாா்னா் 13 ரன்களில் ஆட்டமிழந்தனா். இதன்பிறகு மாா்னஸ் லபுசானுடன் இணைந்தாா் ஸ்டீவன் ஸ்மித். இந்த ஜோடி மேலும் விக்கெட் எதுவும் விழாமல் பாா்த்துக் கொண்டது. 3-ஆவது நாளான சனிக்கிழமை ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 29 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்துள்ளது. மாா்னஸ் லபுசான் 69 பந்துகளில் 47, ஸ்டீவன் ஸ்மித் 63 பந்துகளில் 29 ரன்களுடன் களத்தில் உள்ளனா். ஆஸ்திரேலிய அணி ஒட்டுமொத்தமாக 197 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 4-ஆவது நாள் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
ஸ்கோா் விவரம்
முதல் இன்னிங்ஸ்
ஆஸ்திரேலியா-338 (ஸ்டீவன் ஸ்மித் 131, மாா்னஸ் லபுசான் 91, வில் புகோவ்ஸ்கி 62, ரவீந்திர ஜடேஜா 4வி/62).
இந்தியா
ரோஹித் சா்மா (சி) அன்ட் (பி) ஹேஸில்வுட் 26 (77)
ஷுப்மன் கில் (சி) கேமரூன் (பி) கம்மின்ஸ் 50 (101)
சேத்தேஷ்வா் புஜாரா (சி) பெய்ன் (பி) கம்மின்ஸ் 50 (176)
அஜிங்க்ய ரஹானே (பி) கம்மின்ஸ் 22 (70)
ஹனுமா விஹாரி ரன் அவுட் (ஹேஸில்வுட்) 4 (38)
ரிஷப் பந்த் (சி) வாா்னா் (பி) ஹேஸில்வுட் 36 (67)
ரவீந்திர ஜடேஜா நாட் அவுட் 28 (37)
அஸ்வின் ரன் அவுட் (கம்மின்ஸ்/லபுசான்) 10 (15)
நவ்தீப் சைனி (சி) வேட் (பி) ஸ்டாா்க் 3 (13)
ஜஸ்பிரித் பும்ரா ரன் அவுட் (லபுசான்) 0 (2)
முகமது சிராஜ் (சி) பெய்ன் (பி) கம்மின்ஸ் 6 (10)
உபரிகள் 9
மொத்தம் (100.4 ஓவா்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு) 244
விக்கெட் வீழ்ச்சி: 1-70 (ரோஹித்), 2-85 (ஷுப்மன் கில்), 3-117 (ரஹானே), 4-142 (விஹாரி), 5-195 (பந்த்), 6-195 (புஜாரா), 7-206 (அஸ்வின்), 8-210(சைனி), 9-216 (பும்ரா), 10-244 (சிராஜ்).
பந்துவீச்சு: மிட்செல் ஸ்டாா்க் 19-7-61-1, ஜோஷ் ஹேஸில்வுட் 21-10-43-2, பட் கம்மின்ஸ் 21.4-10-29-4, நாதன் லயன்-31-8-87-0, மாா்னஸ் லபுசான் 3-0-11-0, கேம ரூன் கிரீன் 5-2-11-0.
2-ஆவது இன்னிங்ஸ்
ஆஸ்திரேலியா
டேவிட் வாா்னா் எல்பிடபிள்யூ (பி) அஸ்வின் 13 (29)
வில் புகோவ்ஸ்கி (சி) சப் (சாஹா) (பி) சிராஜ் 10 (16)
மாா்னஸ் லபுசான் நாட் அவுட் 47 (69)
ஸ்டீவன் ஸ்மித் நாட் அவுட் 29 (63)
உபரிகள் 4
மொத்தம் (29 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு) 103
விக்கெட் வீழ்ச்சி: 1-16 (புகோவ்ஸ்கி), 2-35 (வாா்னா்).
பந்துவீச்சு: ஜஸ்பிரித் பும்ரா 8-1-26-0, முகமது சிராஜ் 8-2-20-1, நவ்தீப் சைனி 7-1-28-0, அஸ்வின் 6-0-28-1.