செய்திகள்

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: விராட் கோலியைப் பின்னுக்குத் தள்ளி 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ள ஸ்மித்!

பேட்ஸ்மேன்களுக்கான ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஆஸி. பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலியைப் பின்னுக்குத் தள்ளி 2-ம் இடம் பிடித்துள்ளார்.

DIN

பேட்ஸ்மேன்களுக்கான ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஆஸி. பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலியைப் பின்னுக்குத் தள்ளி 2-ம் இடம் பிடித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிராக 238 ரன்கள் எடுத்த நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன், முதல் இடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளார். 919 புள்ளிகளுடன் அதிகப் புள்ளிகளை எடுத்த நியூசிலாந்து பேட்ஸ்மேன் என்கிற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்டில் 131, 81 ரன்கள் எடுத்த ஸ்மித், விராட் கோலியைப் பின்னுக்குத் தள்ளி 2-ம் இடம் பிடித்துள்ளார். சிட்னி டெஸ்டில் ஆட்ட நாயகன் விருதையும் ஸ்மித் வென்றார். 

சிட்னி டெஸ்டில் இரு அரை சதங்கள் எடுத்த புஜாரா, 10-வது இடத்திலிருந்து 8-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ரிஷப் பந்த் 26-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 

பந்துவீச்சாளரில் அஸ்வின் 9-வது இடமும் பும்ரா 10-வது இடமும் பெற்றுள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

SCROLL FOR NEXT