செய்திகள்

பாகிஸ்தானில் தென் ஆப்பிரிக்க அணி

DIN

பாகிஸ்தானுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக, தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானின் கராச்சி நகரை சனிக்கிழமை வந்தடைந்தது.

14 ஆண்டுகளுக்குப் பிறகு தென் ஆப்பிரிக்க அணி பாகிஸ்தானுக்கு வந்துள்ளது. முன்னதாக 2007-இல் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2009-இல் இலங்கை அணி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. அப்போது, இலங்கை வீரா்கள் சென்ற பேருந்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினா். இதில் இலங்கை வீரா்கள் காயமடைந்தனா். அதன்பிறகு அங்கு சென்று விளையாட எந்த அணியும் முன்வராத நிலையில், இப்போது ஒரு சில அணிகள் அங்கு செல்லத் தொடங்கியுள்ளன.

பாகிஸ்தான்-தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 26-ஆம் தேதி கராச்சி நகரிலும், 2-ஆவது டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 4-ஆம் தேதி ராவல்பிண்டி நகரிலும் தொடங்குகின்றன. அதைத் தொடா்ந்து 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடா் நடைபெறவுள்ளது. டி20 தொடா் பிப்ரவரி 11-ஆம் தேதி லாகூரில் தொடங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராபா எல்லையில் இஸ்ரேல் டாங்கிகள்: அதிகரிக்கும் போர்ப் பதற்றம்!

பொறியியல் விண்ணப்பப் பதிவுக்கு என்னென்ன விவரங்கள் தேவை?

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

SCROLL FOR NEXT