செய்திகள்

இந்திய அணியின் உணர்வுப்பூர்வமானத் தருணங்கள்: கச்சிதமாகப் படம்பிடித்த கேமிராக்கள்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய இந்தியக் கிரிக்கெட் அணியின் உணர்வுப்பூர்வமானத் தருணங்கள் அடங்கிய விடியோ வெளியாகியுள்ளது.

DIN


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய இந்தியக் கிரிக்கெட் அணியின் உணர்வுப்பூர்வமானத் தருணங்கள் அடங்கிய விடியோ வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை பிரதான டெஸ்ட் வீரர்கள் இல்லாத இந்தியக் கிரிக்கெட் அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா மட்டுமின்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் கவனத்தையும் இந்த டெஸ்ட் ஆட்டம் ஈர்த்துள்ளது.

இந்திய வீரர்களின் சாதனையை ஜாம்பவான்கள், ரசிகர்கள் எனப் பலரும் பாராட்டி கொண்டாடி வருகின்றனர்.

பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை ஆஸ்திரேலிய மண்ணில் வைத்து, பிரதான வீரர்கள் இல்லாமல் வீழ்த்தியிருப்பது இந்தியக் கிரிக்கெட்டுக்கும், கிரிக்கெட் ரசிகர்களுக்கும் உணர்வுப்பூர்வமானதாக அமைந்துள்ளது.

வெற்றியை நெருங்கி வந்த திக் திக் நிமிடங்கள் முதல் வெற்றிக்குப் பிந்தைய கொண்டாட்டங்கள் வரை அனைத்து உணர்வுப்பூர்வமானத் தருணங்களையும் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் கேமிராக்கள் கச்சிதமாகப் படம்பிடித்து உணர்வுப்பூர்வமான விடியோவாக வெளியிட்டுள்ளது.

விடியோ காண: https://fb.watch/36JxqLgvpF/

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக என்றால் திமுகவிற்கு அலர்ஜி: டிடிவி தினகரன்

தேஜஸ் விமான விபத்து: விங் கமாண்டர் உடலுக்கு அரசு மரியாதை!

குவாஹாட்டியில் இந்தியாவை புரட்டி எடுத்த தெ.ஆ. ஆல்-ரவுண்டர்கள்: 489 ரன்கள் குவிப்பு!

பெங்களூர் வங்கிப் பணம் கொள்ளை: கும்பலுக்கு பயிற்சி கொடுத்து பிளான் போட்ட காவலர்!

"விவசாயிகளை வஞ்சிக்கும் மத்திய அரசு!" தஞ்சையில் திமுவினர் ஆர்ப்பாட்டம்!

SCROLL FOR NEXT