முகப்பு
செய்திகள்

பிரிஸ்பேன் வெற்றி: இந்திய அணிக்கு எளிதாகியுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்று வாய்ப்பு

இந்திய அணி 2-0 என தொடரை வென்றாலே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுக்குத் தகுதி பெற்று விடும்... 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:20 PM
பகிர்:

பிரிஸ்பேன் டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்று டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியுள்ளதால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு நுழைவதற்கான வாய்ப்பு எளிதாகியுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடியது. ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது. பிரிஸ்பேன் டெஸ்டுக்கு முன்பு டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் இருந்தது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்திய அணி வெற்றி பெற 328 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 97 ஓவர்களில் 329 ரன்கள் எடுத்து பிரிஸ்பேன் டெஸ்டை 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ரிஷப் பந்த் நம்பமுடியாத விதத்தில் இலக்கை விரட்டி 89 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் ரஹானே தலைமையிலான இந்திய அணி 2-1 என டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது. கடந்த முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரையும் கோலி தலைமையிலான இந்திய அணி வென்றது. 

முதல் டெஸ்டில் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்து மோசமாகத் தோற்றது இந்திய அணி. அதன்பிறகு மெல்போர்ன் டெஸ்டை வென்றது. சிட்னியில் நடைபெற்ற 3-வது டெஸ்டைக் கடுமையாகப் போராடி டிரா செய்தது. தற்போது கடினமான இலக்கை 5-ம் நாளில் விரட்டி பிரிஸ்பேன் டெஸ்டை வென்று டெஸ்ட் தொடரையும் பார்டர் கவாஸ்கர் கோப்பையையும் கைப்பற்றியுள்ளது.

இந்த வெற்றியினால் இந்திய அணிக்கு முக்கியமான பலன் கிடைத்துள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றில் பங்கு பெற இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய மூன்று அணிகளும் கடுமையாகப் போட்டியிடுகின்றன. பிரிஸ்பேன் வெற்றியால் இறுதிச்சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

இந்தியாவில் பிப்ரவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இத்தொடரில் 4 டெஸ்டுகளில் விளையாடவுள்ள இந்திய அணி 2-0 என தொடரை வென்றாலே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுக்குத் தகுதி பெற்று விடும். ஒருவேளை ஒரு டெஸ்டில் தோற்றுவிட்டால் மீதமுள்ள மூன்று டெஸ்டுகளிலும் வெல்லவேண்டும். அதாவது தொடரை 3-1 என வென்றாலும் சரிதான். 

கடந்த எட்டு வருடங்களாக இந்தியாவில் விளையாடிய 34 டெஸ்டுகளில் இந்திய அணி 28-ல் வெற்றி பெற்று ஒரு டெஸ்டில் மட்டுமே தோல்வியடைந்துள்ளது. எனவே இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 

இங்கிலாந்து அணி மீதமுள்ள இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று இந்தியாவை 3-0 என வெல்ல வேண்டும். 2-2 என டெஸ்ட் தொடரை சமன் செய்தாலும் பலன் கிடைக்காது. 

ஆஸ்திரேலிய அணி, அடுத்ததாக தென் ஆப்பிரிக்காவில் மூன்று டெஸ்டுகளில் விளையாடுகிறது. இதில் 2-0 என வெல்ல வேண்டும்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி: சதவீதப் புள்ளிகள்

இந்தியா: 71.67% 
நியூசிலாந்து: 70.0% 
ஆஸ்திரேலியா: 69.2% 
இங்கிலாந்து: 65.2%

முழு கட்டுரையைப் படிக்க →