செய்திகள்

சென்னை மாநகராட்சி தேர்தல் தூதராக வாஷிங்டன் சுந்தர் நியமனம்

DIN

சென்னை மாநகராட்சியின் தேர்தல் தூதராக இளம் கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் நிறைவுபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரின் கடைசி ஆட்டத்தில் டெஸ்ட் வீரராக அறிமுகம் ஆனார் தமிழகத்தைச் சேர்ந்த 21 வயது வாஷிங்டன் சுந்தர். மேலும் ஒரு ஒருநாள், 26 டி20 ஆட்டங்களில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். முதல் டெஸ்டில் 4 விக்கெட்டுகள் எடுத்ததுடன் முதல் இன்னிங்ஸில் 62 ரன்கள், 2-வது இன்னிங்ஸில் 22 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்களித்தார். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்றுள்ளார். 

இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் தேர்தல் தூதராக வாஷிங்டன் சுந்தர் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளிலும் இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிப்பதற்கு வாஷிங்டன் சுந்தர் ஊக்கமாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான நிகழ்ச்சிகளிலும் வாஷிங்டன் சுந்தர் பங்கேற்கவுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வள்ளலாா் சா்வதேச மையம் கட்ட எதிா்ப்பு: நாம் தமிழா் கட்சி ஆா்ப்பாட்டம் அறிவிப்பு

கீழ்பவானி கால்வாய் பாசனத்துக்கு நீா் திறக்க வேண்டும்: சீமான்

ஆய்வுக்குப் பிறகே ரேஷனில் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம்: பிரேமலதா கோரிக்கை

பயங்கரவாதத்துக்கு எதிராக சகிப்புத்தன்மை கூடாது: எஸ்சிஓ கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்

பாதுகாப்பான பயண சேவை: அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு

SCROLL FOR NEXT