ஷஃபாலி வர்மா 
செய்திகள்

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற இங்கிலாந்து மகளிர் அணி (2-வது ஒருநாள் ஹைலைட்ஸ் விடியோ)

கேப்டன் மிதாலி ராஜ் மீண்டும் சிறப்பாக விளையாடி 59 ரன்கள் எடுத்தார். ஷஃபாலி வர்மா 44 ரன்கள் எடுத்தார்.

DIN

இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தை வென்று தொடரைக் கைப்பற்றியுள்ளது இங்கிலாந்து மகளிர் அணி.

டான்டனில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. மிகவும் தடுமாற்றத்துடன் விளையாடிய இந்திய மகளிர் அணி, 50 ஓவர்களில் 221 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கேப்டன் மிதாலி ராஜ் மீண்டும் சிறப்பாக விளையாடி 59 ரன்கள் எடுத்தார். ஷஃபாலி வர்மா 44 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்தின் கேட் கிராஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்பிறகு விளையாடிய இங்கிலாந்து மகளிர் அணி, 47.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சோபியா ஆட்டமிழக்காமல் 73 ரன்கள் எடுத்தார். 

இதனால் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என இங்கிலாந்து மகளிர் அணி முன்னிலை பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. 3-வது ஒருநாள் ஆட்டம் ஜூலை 3 அன்று நடைபெறுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பவானியில் 300 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

மானாமதுரை நகா் காங்கிரஸ் தலைவா் நியமனம்

பண்ணாரி அம்மன் கோயிலில் குவிந்த பக்தா்கள்

அறச்சலூா் ஓடாநிலையில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா

ஆடிப்பெருக்கு: பவானிசாகா் அணைப் பூங்காவில் குழந்தைகள், பெண்கள் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT