கோப்புப்படம் 
செய்திகள்

இலங்கையுடனான கடைசி ஒருநாள்: இங்கிலாந்து அணியில் டாம் பாண்டன்

​இலங்கையுடனான கடைசி ஒருநாள் ஆட்டத்துக்கு இங்கிலாந்து அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் டாம் பாண்டன் சேர்க்கப்பட்டுள்ளார்.

DIN


இலங்கையுடனான கடைசி ஒருநாள் ஆட்டத்துக்கு இங்கிலாந்து அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் டாம் பாண்டன் சேர்க்கப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில் 2-வது ஒருநாள் ஆட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது. 3-வது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் ஒருநாள் தொடருக்கு முன் தனிப்பட்ட காரணங்களுக்காக அணியிலிருந்து விலகினர். இந்த நிலையில், கடைசி ஒருநாள் ஆட்டத்தில் மலானுக்குப் பதில் பாண்டன் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பான அறிவிப்பை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சுட்டுரையில் வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டி20 பிளாஸ்டில் பாண்டன் 47 பந்துகளில் சதமடித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுச்சேரி எஸ்.ஐ. எழுத்துத் தோ்வு முடிவுகள் வெளியீடு

புதுச்சேரியில் மீண்டும் தேஜக கூட்டணி ஆட்சி: அதிமுகவினா் சபதம்

கெடாா் சுப்ரமணியசுவாமி கோயிலில் சூரசம்ஹார திருவிழா

வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடக்கம்

பொறியியல் பணிகள்: விழுப்புரம் மாா்க்க ரயில் போக்குவரத்தில் மாற்றம்

SCROLL FOR NEXT