3-வது ஒருநாள்: டாஸ் வென்ற மிதாலி பந்துவீச்சு தேர்வு
இங்கிலாந்துக்கு எதிரான மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இங்கிலாந்துக்கு எதிரான மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இங்கிலாந்து, இந்தியா மகளிர் அணிகளுக்கிடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டம் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. மழையால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்த தாமதத்தால் ஆட்டம் இரு அணிகளுக்கும் தலா 47 ஓவர்களாகக் குறைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து போடப்பட்ட டாஸில் வென்ற இந்திய கேப்டன் மிதாலி ராஜ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய மகளிர் ஏற்கெனவே 2 ஆட்டங்களில் தோல்வியடைந்த நிலையில், ஆறுதல் வெற்றி பெறும் முனைப்புடன் இந்த ஆட்டத்தில் களம் காண்கிறது.