முகப்பு
செய்திகள்

மகளிர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள்: எட்வர்ட்ஸை முந்தி மிதாலி சாதனை

சர்வதேச ​மகளிர் கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக அதிக ரன்கள் எடுத்த வீராங்கனைகள் வரிசையில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் சார்லட் எட்வர்ட்ஸை முந்தி இந்திய கேப்டன் மிதாலி ராஜ் சாதனை படைத்துள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:


சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக அதிக ரன்கள் எடுத்த வீராங்கனைகள் வரிசையில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் சார்லட் எட்வர்ட்ஸை முந்தி இந்திய கேப்டன் மிதாலி ராஜ் சாதனை படைத்துள்ளார்.

இந்தியா, இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கிடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் மிதாலி ராஜின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பவுண்டரி அடித்து வெற்றி இலக்கை அடையச் செய்த மிதாலி ராஜ் 75 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்த இன்னிங்ஸில் 23-வது ஓவரில் பவுண்டரி அடித்த மிதாலி ராஜ் சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக அதிக ரன்கள் எடுத்த வீராங்கனை என்ற சாதனையை எட்டினார்.

முன்னதாக, இங்கிலாந்து கேப்டன் சார்லட் எட்வர்ட்ஸ் 10,273 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்த வீராங்கனைகளில் முதலிடம் வகித்திருந்தார். இந்த சாதனையைத்தான் மிதாலி ராஜ் முறியடித்திருக்கிறார்.

சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 10 ஆயிரம் ரன்களுக்கு மேல் எடுத்த வீராங்கனைகள் இவர்கள் இருவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.