முகப்பு
செய்திகள்

மே.இ. தீவுகள் டி20 தொடர்: சிக்ஸர் பேட்ஸ்மேன்களை அடக்கிய தெ.ஆ. சுழற்பந்து வீச்சாளர்

கெய்ல், லூயிஸ், பொலார்ட், ரஸ்ஸல், பூரன், ஹெட்மையர் என அதிரடி பேட்ஸ்மேன்கள் இருந்தாலும் சிறப்பாகப் பந்துவீசி...

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:34 AM
பகிர்:

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரை 3-2 என வென்று அசத்தியுள்ளது தென் ஆப்பிரிக்க அணி.

உலக சாம்பியனை அவர்களுடைய சொந்த மண்ணிலேயே வீழ்த்தியுள்ளது. டி20 தொடர் முழுக்கச் சிறப்பாகப் பந்துவீசிய தென் ஆப்பிரிக்க இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ஷம்சி, தொடர் நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

31 வயது ஷம்சி இதுவரை 2 டெஸ்டுகள், 24 ஒருநாள், 37 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். கடந்த ஐபிஎல் ஏலத்தில் இவரை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை. 2016 முதல் 2018 வரை ஆர்சிபி அணிக்காக விளையாடிய ஷம்சி, இதுவரை 4 ஐபிஎல் ஆட்டங்களில் மட்டுமே விளையாடியுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் கெய்ல், லூயிஸ், பொலார்ட், ரஸ்ஸல், பூரன், ஹெட்மையர் என அதிரடி பேட்ஸ்மேன்கள் இருந்தாலும் சிறப்பாகப் பந்துவீசி தனது அணிக்கு வெற்றி தேடித்தந்துள்ளார் ஷம்சி. தொடர் முழுக்கவே குறைந்த அளவில் ரன்கள் கொடுத்து மே.இ. தீவுகள் அணியைக் கட்டுப்படுத்தியுள்ளார். முதல் டி20 ஆட்டத்தில் மட்டுமே 4 ஓவர்களில் 27 ரன்கள் கொடுத்தார். அடுத்த 4 டி20 ஆட்டங்களிலும் ஒரு ஓவருக்கு 4 ரன்களுக்கு மேல் அவர் கொடுக்கவில்லை. இதுதான் அவருடைய மகத்தான சாதனையாகப் பார்க்கப்படுகிறது. 

டி20 உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்க அணியின் மிகப்பெரிய பலமாக, எதிரணிகளை அச்சுறுத்தும் பந்துவீச்சாளராக ஷம்சி இருக்கப் போகிறார். 

மே.இ. தீவுகள் டி20 தொடரில் ஷம்சியின் பந்துவீச்சு

4-0-27-1
4-0-16-1
4-0-13-2
4-0-13-2
4-0-11-1
 

முழு கட்டுரையைப் படிக்க →