செய்திகள்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் மூன்று வீரர்கள் உள்பட ஏழு பேருக்கு கரோனா பாதிப்பு

இலங்கை அணிக்கு எதிராக விளையாடிய இங்கிலாந்து அணியில் மூன்று வீரர்கள் உள்பட ஏழு பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

DIN

இலங்கை அணிக்கு எதிராக விளையாடிய இங்கிலாந்து அணியில் மூன்று வீரர்கள் உள்பட ஏழு பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள், மூன்று டி20 ஆட்டங்களில் விளையாடியது இலங்கை அணி. டி20 தொடரை 3-0 என்றும் ஒருநாள் தொடரை 2-0 என்றும் இங்கிலாந்து அணி வென்றது.

கடந்த ஞாயிறன்று நடைபெற்ற 3-வது ஒருநாள் ஆட்டத்துக்குப் பிறகு இங்கிலாந்து அணியினருக்கு வழக்கமான கரோனா பரிசோதனை நடைபெற்றது. இதில் எதிர்பாராதவிதமாக மூன்று வீரர்கள் உள்பட ஏழு பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து ஏழு பேரும் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அணியில் இருந்த இதர இங்கிலாந்து வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இதில் உள்ள சிக்கலே பாகிஸ்தான் அணியுடன் இங்கிலாந்து அணி அடுத்ததாக விளையாடவுள்ளது. இரு அணிகளும் 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகின்றன. ஒருநாள் தொடர் வியாழன் (ஜூலை 8) முதல் தொடங்குகிறது.

இதனால் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான புதிய இங்கிலாந்து அணி, இலங்கைக்கு எதிராகக் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இணையம் முழுக்க அகரம் சூர்யா!

ஜார்க்கண்ட் வரலாற்றின் ஒரு அத்தியாயம் முடிவுக்கு வந்தது: மமதா இரங்கல்

தங்கம் - வெள்ளி விலை: இன்றைய நிலவரம்!

சிபு சோரன் மறைவு: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

வின்ஃபாஸ்ட் ஆலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT