முகப்பு
செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிப்பு

ஹெட்மையர், ஷெல்டன் காட்ரெல், ராஸ்டன் சேஸ் ஆகிய மூவரும் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார்கள். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:35 AM
ஹெட்மையர்
பகிர்:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் ஆஸ்திரேலிய அணி 5 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடவுள்ளது. இதில் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள மே.இ. தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

உடற்தகுதி காரணமாக மார்ச் மாதம் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் சேர்க்கப்படாமல் இருந்த ஹெட்மையர், ஷெல்டன் காட்ரெல், ராஸ்டன் சேஸ் ஆகிய மூவரும் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார்கள். 

Advertisement

ஒருநாள் தொடருக்கு முன்பு டி20 தொடரில் ஆஸ்திரேலியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் விளையாடவுள்ளன. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடிய மே.இ. தீவுகள் அணி தான் ஆஸிக்கு எதிரான டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. டி20 தொடர் ஜூலை 9 அன்றும் ஒருநாள் தொடர் ஜூலை 20 அன்றும் தொடங்குகின்றன. 

மேற்கிந்தியத் தீவுகள் ஒருநாள் அணி

பொலார்ட் (கேப்டன்), ஷாய் ஹோப் (துணை கேப்டன்), ஃபேபியன் ஆலன், டேரன் பிராவோ, ராஸ்டன் சேஸ், காட்ரெல், ஹெட்மையர், ஹோல்டர், அகேல் ஹோசைன், அல்ஸாரி ஜோசப், எவின் லூயிஸ், ஜேசன் முகமது, ஆண்டர்சன் பிலிப், நிகோலஸ் பூரன், ரொமேரியோ ஷெப்பர்ட்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments