செய்திகள்

கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடி வரும் அஸ்வின்

இங்கிலாந்து தொடருக்கான பயிற்சியாக சர்ரே அணியில் இடம்பெற்று கவுன்டி கிரிக்கெட் போட்டியில்...

DIN

இங்கிலாந்து தொடருக்கான பயிற்சியாக சர்ரே அணியில் இடம்பெற்று கவுன்டி கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறார் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின். 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை நியூசிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இதனால் டெஸ்ட் உலக சாம்பியன் ஆனது நியூசிலாந்து அணி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்கிற பெருமையை இந்தியாவின் அஸ்வின் பெற்றார். 14 ஆட்டங்களில் 71 விக்கெட்டுகளை எடுத்தார்.

இந்நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்குத் தயாராவதற்காக கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார் அஸ்வின். சர்ரே அணியில் இடம்பெற்றுள்ள அஸ்வின், ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் சோமர்செட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதல் நாளில் 28 ஓவர்கள் வீசி 70 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். காயமடைந்த நியூசி. வீரர் கைல் ஜேமிசனுக்குப் பதிலாக அஸ்வின் இடம்பெற்றுள்ளார். இந்த ஆட்டம் முடிந்தபிறகு இந்திய அணியினருடனான பயிற்சியில் அஸ்வின் இணைந்து கொள்வார். 

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4-ல் தொடங்குகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளத்தில் மகள் பாலியல் வன்கொடுமை: பின்னணியில் தந்தை! - கைது செய்து விசாரணை

மீனவர்கள் விவகாரம்: மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

பாஜக சொன்னால் Non stop - ஆக பல்டி அடிப்பார் EPS! - M.K. Stalin | DMK meeting | BJP | ADMK

டப்பா என்ஜினுக்கு முன்னால், சூப்பர் பாஸ்ட் என்ஜின் தலைகுனியாது: முதல்வர்

கோலிவுட் ஸ்டூடியோ!

SCROLL FOR NEXT