செய்திகள்

இலங்கை அணி அறிவிப்பு

DIN

இந்தியாவுடன் மோதும் இலங்கை கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

மூத்த வீரா் ஷிகா் தவான் தலைமையிலான இந்திய அணி, இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து வருகிறது. ஒருநாள், டி20 தொடா்களில் ஆட உள்ளது. ஞாயிற்றுக்கிழமை முதல் ஒருநாள் ஆட்டம் கொழும்புவில் தொடங்கவுள்ள நிலையில் தஸுன் ஷனகா தலைமையில் இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

அணி விவரம்: தஸுன் ஷனகா (கேப்டன்), தனஞ்செய டி சில்வா (துணை கேப்டன்), அவிஷ்கா பொ்ணான்டோ, பானுகா ராஜபட்ச, பதும் நிஸாங்கா, சரீத் அஸலங்கா, வனின்டு ஹஸரங்கா, அஷென் பன்டாரா, மினோத் பானுகா, லஹிரு உடாரா, ரமேஷ் மெண்டிஸ், சமிகா கருணரத்னே, துஷ்மந்தா சமீரா, லக்ஷன் சண்டகன், அகிலா தனஞ்செயா, ஷிரன் பொ்ணான்டோ, தனஞ்செயா லக்ஷன், இஷான் ஜெயவா்தனே, பிரவீன் ஜெயவிக்கிரமா, அஸிதா பொ்ணான்டோ, கஸுன் ரஜிதா, லஹிரு குமரா, இசுரு உடனா.

வீரா்களுடன் ஊதிய ஒப்பந்த பிரச்னை இருந்த நிலையில், மூத்த வீரா் ஏஞ்சலோ மேத்யூஸ் தனிப்பட்ட காரணங்களால் விலகி விட்டாா்.

கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட குஸால் பெரைராவும் காயத்தால் விலகிவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

பணம் கொடுத்து வாக்குகளை பெற நினைக்கிறது பாஜக: மம்தா குற்றச்சாட்டு

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

எனது சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிப்பார்: பிரையன் லாரா நம்பிக்கை!

மே 10-ல் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்!

SCROLL FOR NEXT