இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்தியாவின் முதல் 3 பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்துவிட்டனர்.
இந்தியா, இலங்கை அணிகளுக்கிடையிலான 2-வது ஒருநாள் ஆட்டம் கொழும்பில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 275 ரன்கள் எடுத்தது.
இலங்கை பேட்டிங்: கடைசி கட்டத்தில் கருணாரத்னே அதிரடி: இந்தியாவுக்கு 276 ரன்கள் இலக்கு
முதல் ஒருநாள் ஆட்டத்தில் வெளிப்படுத்திய அதே அதிரடியை இந்த ஆட்டத்திலும் தொடர்ந்தார் பிரித்வி ஷா. முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் பவுண்டரி அடித்தார். அவர் வேகப்பந்துவீச்சுக்கு எதிராக சிறப்பாக ஆடுவதை உணர்ந்த இலங்கை கேப்டன் மூன்றாவது ஓவரிலேயே சுழற்பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்காவை அறிமுகப்படுத்தினார். இதற்குப் பலனாக பிரித்வி ஷா 13 ரன்களுக்கு அதே ஓவரில் போல்டானார்.
அடுத்து களமிறங்கிய இஷான் கிஷன் 1 ரன் எடுத்து கசுன் ரஜிதா பந்தில் போல்டானார்.
இதன்பிறகு, கேப்டன் ஷிகர் தவான் மற்றும் மணீஷ் பாண்டே பாட்னர்ஷிப் அமைத்தனர். ஆனால், பெரிய பாட்னர்ஷிப்பாக மாறுவதற்கு முன்பே தவான் 29 ரன்களுக்கு ஹசரங்கா சுழலில் வீழ்ந்தார்.
சற்று முன்பு வரை 14 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்துள்ளது.
மணீஷ் பாண்டேவும், சூர்யகுமார் யாதவும் விளையாடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.