டி-20 கிரிக்கெட்: இந்திய அணி பேட்டிங்
இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்ய உள்ளது.
இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்ய உள்ளது.
கொழும்பு பிரமதாசா மைதானத்தில் நடக்கும் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் ஷனகா பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்த போட்டியில் இந்திய அணியில் அறிமுக வீரராக தமிழக வீரர் வருண் சக்கரவரத்தி களமிறங்குகிறார்.
அவருடன் இணைந்து, மற்றொரு வீரரான ப்ரித்வி ஷாவும் அறிமுக வீரராக களமிறங்க உள்ளார். முன்னதாக இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றனது குறிப்பிடத்தக்கது.