முகப்பு
செய்திகள்

மகளிர் கிரிக்கெட்டுக்கு ஊடக வெளிச்சம் தேவை: மிதாலி

​மகளிர் கிரிக்கெட்டை ஊக்குவிக்க ஊடகங்களின் வெளிச்சம் தேவை என இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:21 PM
கோப்புப்படம்
பகிர்:


மகளிர் கிரிக்கெட்டை ஊக்குவிக்க ஊடகங்களின் வெளிச்சம் தேவை என இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார்.

மிதாலி ராஜ் காணொலி வாயிலாக செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ஜப்பான் டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா ஆட்டத்துக்குப் பிந்தைய செய்தியாளர்கள் சந்திப்பைப் புறக்கணித்தது பற்றி மிதாலி ராஜிடம் கேட்கப்பட்டது.

அதற்கு மிதாலி பதிலளித்தது:

"எந்தவொரு வீரர்/வீராங்கனைக்கும் தனிமையில் இருப்பது கடினம். ஆனால், ஒரு தொடரில் பங்கேற்பதற்கு முன்பு நாங்கள் அப்படி உணர மாட்டோம். தனிப்பட்ட முறையில் செய்தியாளர் சந்திப்பைக் கைவிட வேண்டும் என்று எனக்குத் தோன்றியதில்லை. காரணம், தற்போதைய நிலையில் மகளிர் கிரிக்கெட்டுக்கு ஊடக வெளிச்சம் தேவை.

இந்த விளையாட்டு வளர்ச்சியடைய முயற்சிப்பது வீரர்கள்/வீராங்கனைகளுக்கும் முக்கியம். விளையாட்டை ஊக்குவிக்க நாங்கள் முயற்சிக்க வேண்டும்" என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.