செய்திகள்

இங்கிலாந்தில் பயிற்சியைத் தொடங்கிய இந்திய வீரர்கள் (விடியோ)

இங்கிலாந்துக்குச் சென்றுள்ள இந்திய அணியினர், தங்களது பயிற்சியைத் தொடங்கியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது..

DIN

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக இங்கிலாந்துக்குச் சென்றுள்ள இந்திய அணியினர், தங்களது பயிற்சியைத் தொடங்கியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் இங்கிலாந்தின் சௌதாம்ப்டன் நகரில் ஜூன் 18-ம் தேதி தொடங்கவுள்ளது. அதன்பிறகு இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4 அன்று தொடங்கி, செப்டம்பர் 14 அன்று முடிவடைகிறது. இந்தச் சுற்றுப்பயணத்துக்காக இந்திய அணி இங்கிலாந்துக்குச் சென்றுள்ளது. இப்போட்டிக்கு - மைக்கேல் காவ், ரிச்சர்ட் இல்லிங்வொர்த் ஆகியோர் கள நடுவர்களாகவும் தொலைக்காட்சி நடுவராக ரிச்சர்ட் கெட்டில்பாரோவும் பணியாற்றவுள்ளார்கள். கிறிஸ் பிராட், போட்டியின் நடுவராகப் பணியாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்குச் சென்ற இந்திய வீரர்கள் விடுதி அறையில் தனிமைப்படுத்தப்பட்டார்கள். இந்நிலையில் இந்திய அணியினர் தங்கள் பயிற்சியைத் தொடங்கியுள்ளார்கள். இதன் விடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT