செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகத்தில் அக். 17 முதல் நவ. 14 வரை நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை

DIN

டி20 உலகக் கோப்பைப் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17-ல் தொடங்கி நவம்பர் 14 அன்று முடிவடையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த டி20 உலகக் கோப்பை கரோனா அச்சுறுத்தலால் ஒத்திவைக்கப்பட்டது. பிறகு, இந்தியாவில் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் 2021 டி20 உலகக் கோப்பை நடைபெறும் என ஐசிசி அறிவித்தது. இதனால் 2022 டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் டி20 உலகக் கோப்பைப் போட்டி ஐக்கிய அமீரகத்தில் நடைபெறும் என்றும் அக்டோபர் 17-ல் தொடங்கி நவம்பர் 14 வரை நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் கரோனா அச்சுறுத்தல் நீடிப்பதால் ஐக்கிய அமீரகத்தில் டி20 உலகக் கோப்பைப் போட்டி நடைபெறவுள்ளது. இதனால் டி20 உலகக் கோப்பைப் போட்டி பற்றிய அதிகாரபூர்வத் தகவலை ஐசிசி விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்தும் சில வீரா்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதை இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் 2021 போட்டி ஒத்திவைக்கப்பட்டது. 52 நாள்களுக்கு நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் போட்டியில் 60 ஆட்டங்கள் இடம்பெற இருந்தன. ஆனால் 24 நாள்களில் 29 ஆட்டங்கள் மட்டுமே நடைபெற்றன. ஐபிஎல் 2021 போட்டியின் மீதமுள்ள ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளன. ஐபிஎல் 2021 போட்டி, செப்டம்பர் 19-ல் தொடங்கி அக்டோபர் 15-ல் முடிவடையும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

வடமேற்குத் தில்லி தொகுதியில் வெற்றி மகுடம் யாருக்கு?

ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா உடல் நலமடைந்தவுடன் மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்பாா்

SCROLL FOR NEXT