முகப்பு
செய்திகள்

மே.இ. தீவுகள் டி20 அணியில் ரஸ்ஸல் மீண்டும் சேர்ப்பு

மே.இ. தீவுகள் அணி 2012, 2016 ஆண்டுகளில் டி20 உலகக் கோப்பையை வென்றபோது...

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:30 AM
பகிர்:

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரு டி20 ஆட்டங்களுக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியில் பிரபல வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸல் இடம்பிடித்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து இரு டெஸ்டுகள், 5 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது தென் ஆப்பிரிக்க அணி. டெஸ்ட் தொடரை 2-0 என தெ.ஆ. அணி வென்றது. இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் இன்று முதல் தொடங்குகிறது. 

இந்நிலையில் முதல் இரு டி20 ஆட்டங்களுக்கான பொலார்ட் தலைமையிலான மே.இ. தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பிரபல வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸல் இடம்பெற்றுள்ளார்.

மே.இ. தீவுகள் அணி 2012, 2016 ஆண்டுகளில் டி20 உலகக் கோப்பையை வென்றபோது அந்த அணியில் ரஸ்ஸல் இடம்பெற்றிருந்தார். 49 சர்வதேச டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ள ரஸ்ஸல், கடைசியாகக் கடந்த வருடம் மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராக டி20 சர்வதேச ஆட்டத்தில் விளையாடினார். 

முழு கட்டுரையைப் படிக்க →