முகப்பு
செய்திகள்

டி20: அற்புதமாகப் பந்துவீசி மே.இ. தீவுகள் அணியை வீழ்த்திய தெ.ஆ. அணி (ஹைலைட்ஸ் விடியோ)

ரபாடா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:30 AM
ரபாடா
பகிர்:

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து இரு டெஸ்டுகள், 5 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது தென் ஆப்பிரிக்க அணி. டெஸ்ட் தொடரை 2-0 என தெ.ஆ. அணி வென்றது. இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. 

முதல் டி20 ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

செயின்ட் ஜார்ஜில் நடைபெற்ற 2-வது டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற மே.இ. தீவுகள் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தெ.ஆ. அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. கேப்டன் பவுமா 46 ரன்களும் ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் 42 ரன்களும் எடுத்தார்கள். ஒபெட் மெக்காய் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

முதல் டி20 ஆட்டம் போல இலக்கை மே.இ. தீவுகள் அணி எளிதாக அடைந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தெ.ஆ. அணி சிறப்பாகப் பந்துவீசியது. நடுவரிசை வீரர்களான கெய்ல், நிகோலஸ் பூரன், பொலார்ட், ரஸ்ஸல் என நான்கு பேரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தார்கள். இதனால் மே.இ. தீவுகள் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் மட்டுமே எடுத்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ரபாடா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனால் டி20 தொடர் 1-1 என சமனில் உள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →