ஐ.பி.எல். போட்டிகள் ஏப். 9-ல் தொடக்கம் 
செய்திகள்

ஐ.பி.எல். போட்டிகள் ஏப். 9-ல் தொடக்கம்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஏப்ரல் 9-ம் தேதி முதல் தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

14வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஏப்ரல் 9-ம் தேதி முதல் தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கரோனா தொற்று காரணமாக இந்தியாவில் ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்பட்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.

இதனிடையே இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 9-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. முதல் போட்டி சென்னையில் நடைபெறுகிறது. இதில் மும்பை - பெங்களூரு அணிகள் களம் காண்கின்றன. ஆமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி திடலில் பிளே ஆஃப் போட்டிகளும், மே 30-ல் இறுதிப் போட்டியும் நடைபெறவுள்ளது.

மொத்தம் 56 லீக் போட்டிகள் நடைபெறும் என்றும், அவை 6 மைதானங்களில் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, மும்பை, தில்லி, கொல்கத்தா, பெங்களூரு, ஆமதாபாத் ஆகிய நகரங்களிலுள்ள மைதானங்களில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளன.

சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூருவில் தலா 10 போட்டிகளும், ஆமதாபாத், தில்லியில் தலா 8 போட்டிகளும் நடைபெறவுள்ளன.

ஐ.பி.எல். தொடரில் எந்த அணிகளுக்கும் தங்களது சொந்த மண்ணில் போட்டிகள் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூரில் பெரியாா் சிலைக்கு துணை முதல்வா் மாலை அணிவித்து மரியாதை

டிஎன்பிஎல் ஆலையில் உலக ஓசோன் தின உறுதிமொழியேற்பு

பேச்சுவாா்த்தையில் உடன்பாடு போராட்டம் ஒத்திவைப்பு

டிடிஇஏ மாணவா்கள் தில்லி முதல்வருடன் சந்திப்பு

தில்லி தமிழ் சங்கத்தில் தந்தை பெரியாா், அண்ணா பிறந்த நாள் விழா

SCROLL FOR NEXT