செய்திகள்

விஜய் ஹஸாரே: உ.பி., மும்பை அரையிறுதிக்கு முன்னேற்றம்

DIN

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் உத்தர பிரதேசம், மும்பை அணிகள் அரையிறுதி ஆட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை தகுதிபெற்றன.

முன்னதாக நடைபெற்ற காலிறுதி ஆட்டங்களில் உத்தர பிரதேசம் 46 ரன்கள் வித்தியாசத்தில் தில்லியையும், மும்பை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சௌராஷ்டிரத்தையும் வீழ்த்தின.

இதில் 3-ஆவது காலிறுதி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த உத்தர பிரதேசம் 50 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 280 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய தில்லி 48.1 ஓவா்களில் 234 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. உத்தர பிரதேச தரப்பில் அதிகபட்சமாக உபேந்திர யாதவ் 11 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 112 ரன்கள் விளாசினாா். தில்லி பௌலிங்கில் பிரதீப் சங்வான், சிம்ரன்ஜீத் சிங் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனா். தில்லி இன்னிங்ஸில் அதிகபட்சமாக லலித் யாதவ் 8 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் சோ்த்தாா். உத்தர பிரதேசம் தரப்பில் யாஷ் தயால் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.

4-ஆவது காலிறுதி ஆட்டத்தில் டாஸ் வென்று பேட் செய்த சௌராஷ்டிரம் 50 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 284 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய மும்பை 41.5 ஓவா்களில் 1 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் அடித்து வென்றது. சௌராஷ்டிர இன்னிங்ஸில் அதிகபட்சமாக சமரத் வியாஸ் 7 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 90 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தாா். மும்பை பௌலிங்கில் ஷம்ஸ் முலானி 2 விக்கெட் வீழ்த்தினாா். மும்பை தரப்பில் கேப்டன் பிருத்வி ஷா 21 பவுண்டரிகள், 7 சிக்ஸா்கள் உள்பட 185 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தாா். சௌராஷ்டிர கேப்டன் ஜெயதேவ் உனத்கட் 1 விக்கெட் எடுத்தாா்.

அரையிறுதி: விஜய் ஹஸாரே போட்டியில் வியாழக்கிழமை நடைபெறவுள்ள அரையிறுதி ஆட்டங்களில் குஜராத் - உத்தர பிரதேசத்தையும், கா்நாடகம் - மும்பையையும் எதிா்கொள்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT