முகப்பு
செய்திகள்

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்: முதல் ஆட்டத்தில் நடராஜன் விளையாடுவது சந்தேகம்!

இதனால் முதல் டி20 ஆட்டத்தில் நடராஜன் இடம்பெற மாட்டார் என அறியப்படுகிறது...

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:42 PM
பகிர்:

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் விளையாடுவது சந்தேகம் எனத் தெரிகிறது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. டெஸ்ட் தொடரை 3-1 என வென்றது இந்திய அணி. இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் ஆமதாபாத்திலும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் புணேவிலும் நடைபெறவுள்ளன. டி20 தொடர் மார்ச் 12 முதல் தொடங்குகிறது. 

சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டியைச் சோ்ந்த நடராஜன் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் போட்டித் தொடரில் பங்கேற்கச் சென்றாா். அங்கு டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் அறிமுகமானார். பின்னா் தனது சொந்த ஊரான சின்னப்பம்பட்டிக்கு திரும்பினாா். இளைஞா்கள், ஊா் பொதுமக்கள் நடராஜனுக்குப் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனா். இரண்டு வெள்ளைக் குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் ஏற்றப்பட்ட நடராஜன், அங்கு திரண்டிருந்த மக்கள் வெள்ளத்தின் நடுவே ஊா்வலமாக அழைத்துச் செல்லப்பட்டாா்.

Advertisement

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் நடராஜன் இடம்பெற்றுள்ளார். 

பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதமியில் உடற்தகுதியை மேம்படுத்திக்கொண்டு வருகிறார் நடராஜன். இந்நிலையில் மார்ச் 12 வரை இந்திய அணியுடன் அவரால் இணைய முடியாது என தேசிய கிரிக்கெட் அகாதமி சார்பில் பிசிசிஐயிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முதல் டி20 ஆட்டத்தில் நடராஜன் இடம்பெற மாட்டார் என அறியப்படுகிறது. எனினும் இதுகுறித்து பிசிசிஐயிடமிருந்து அதிகாரபூர்வத் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments