முகப்பு
செய்திகள்

ராய் மீண்டும் விளாசல்: இந்தியாவுக்கு 165 ரன்கள் இலக்கு

இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:44 PM
பகிர்:


இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது டி20 ஆட்டம் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. ஷிகர் தவான் மற்றும் அக்சர் படேலுக்குப் பதில் அறிமுக வீரர்களாக இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் களமிறங்கினர்.

இங்கிலாந்து அணியில் மார்க் வுட்டுக்குப் பதில் டாம் கரன் சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய் மற்றும் ஜோஸ் பட்லர் களமிறங்கினர். பட்லர் தனது முதல் பந்திலேயே புவனேஷ்வர் குமாரிடம் ஆட்டமிழந்தார். இதையடுத்து, ராய் மற்றும் டேவிட் மலான் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பவர் பிளே வரை விக்கெட்டைப் பறிக்கொடுக்காமல் இருந்தனர். முதல் 6 ஓவர்களில் அந்த 1 விக்கெட் இழப்புக்கு 44 ரன்கள் எடுத்திருந்தது.

இதையடுத்து, இருவரும் ரன் ரேட்டை படிப்படியாக உயர்த்தத் தொடங்கினர். இந்த நிலையில், யுஸ்வேந்திர சஹால் வீசிய 9-வது ஓவரில் மலான் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

எனினும், ராய் தனது அதிரடியைத் தொடர்ந்தார். அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ராய் 46 ரன்களுக்கு வாஷிங்டன் சுந்தர் சுழலில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, கேப்டன் இயான் மார்கன் அதிரடியாக விளையாடத் தொடங்கினார். ஜானி பேர்ஸ்டோவும் மெதுவாக அதிரடிக்கு மாற முயற்சித்தார். ஆனால், சிக்ஸர் அடிக்க முயற்சித்த பேர்ஸ்டோவ் விக்கெட்டையும் சுந்தர் வீழ்த்தினார்.

இதன்பிறகு, இந்தியப் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி ரன்களைக் கட்டுப்படுத்தினர். ஆடுகளத்துக்கு ஏற்ப பந்தின் வேகத்தை குறைத்து பந்துவீசினர். இதனால், அந்த அணிக்கு பவுண்டரிகள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது.

கடைசி கட்டத்தில் பெரிய ஸ்கோராக மாற்ற முயற்சித்த மார்கன் 28 ரன்களுக்கு ஷர்துல் தாக்குரின் மெதுவான பந்தில் ஆட்டமிழந்தார்.

பென் ஸ்டோக்ஸ் கடைசி வரை போராடியதில் அவருக்கு 19-வது ஓவரில் மட்டும் 1 பவுண்டரி கிடைத்தது. ஆனால், கடைசி ஓவரில் ஷர்துலிடம் ஆட்டமிழந்தார். சாம் கரன் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து இன்னிங்ஸை முடித்தார். 

இதன்மூலம், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இங்கிலாந்து 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது.

இந்தியத் தரப்பில் ஷர்துல், வாஷிங்டன் தலா 2 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர், சஹால் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

முழு கட்டுரையைப் படிக்க →