செய்திகள்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு கரோனா

DIN


தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் தொடருக்கு முன்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதுபற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது:

"தென் ஆப்பிரிக்கா தொடருக்கான பாகிஸ்தான் தேசிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு செவ்வாய்க்கிழமை 35 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஒருவரைத் தவிர்த்து அனைத்து வீரர்களுக்கும் நோய்த் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள வீரர் அவரது இல்லத்தில் வைத்து வியாழக்கிழமை மறுபரிசோதனை மேற்கொள்கிறார். இரண்டு நாள்களுக்குப் பிறகு மறுபரிசோதனை செய்வதற்கு முன்பாக லாகூரில் தனிமையில் இருக்க வேண்டும். வீட்டில் மேற்கொள்ளப்பட்டும் மறுபரிசோதனையில் நோய்த் தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டால் மட்டுமே அவர் லாகூர் செல்ல முடியும்.

மற்ற வீரர்கள் வியாழக்கிழமை லாகூரில் கூடுகின்றனர். வெள்ளிக்கிழமை முதல் அங்கு பயிற்சி முகாம் நடைபெறுகிறது."

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 ஒருநாள் ஆட்டங்கள் மற்றும் 4 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடர்களில் விளையாட 35 வீரர்கள் கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மார்ச் 26-ம் தேதி ஜோகன்னஸ்பர்க் புறப்படுகிறது.

அதன்பிறகு, ஜிம்பாப்வேவுக்கு எதிரான 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடர்களில் விளையாட ஏப்ரல் 17-ம் தேதி புலவாயோ செல்கிறது பாகிஸ்தான் அணி. இந்த அணி மே 12-ம் தேதி பாகிஸ்தான் திரும்பவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோனியின் அதிரடியால் நெட் ரன் ரேட்டில் தப்பித்த சிஎஸ்கே!

சவுக்கு சங்கரிடம் பேட்டி கண்ட ஃபெலிக்ஸ் ஜெரால்ட் கைது?

75 வயதில் பாஜக மூத்த தலைவர்களுக்கு ஓய்வு: அப்போ மோடிக்கு? ரேவந்த் ரெட்டி பேச்சு

‘தீராக் காதல்’ ஷிவதா...!

ரிசர்வ் வங்கி: புதிய செயல் இயக்குநர் நியமனம்!

SCROLL FOR NEXT