மனு பாக்கர் - யாஷஸ்வினி தேஸ்வால் - விக்டோரியா 
செய்திகள்

சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டி: தங்கம் வென்றார் இந்தியாவின் யாஷஸ்வினி

சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை யாஷஸ்வினி தேஸ்வால் தங்கம் வென்றார்.

DIN


சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை யாஷஸ்வினி தேஸ்வால் தங்கம் வென்றார்.

தில்லியில் சர்வதேச துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பு சார்பில் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது.

இதில், பெண்களுக்கான 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்தியாவின் யாஷஸ்வினி தேஸ்வால் 238.8 புள்ளிகளைப் பெற்று தங்கம் வென்றார். 

அவருக்கு அடுத்தபடியாக மற்றொரு இந்திய வீராங்கனையான மனு பாக்கர் 236.7 புள்ளிகளைப் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.

பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த விக்டோரியா 215.9 புள்ளிகளைப் பெற்று வெண்கலம் பதக்கம் வென்றார்.

மற்றோரு இந்திய வீராங்கனையான ஸ்ரீ நிவேதா போட்டியில் நல்ல தொடக்கத்தை அளித்திருந்தாலும், 193.5 புள்ளிகளுடன் 4-ம் இடத்தைப் பிடித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கண் கவர் பொருங்கோட... மேகா!

டியூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் பாடிய ‘சிங்காரி’ பாடல் வெளியீடு!

பல பொருள் - ஒரு சொல் பயில்க

குரலினிது... ஷ்ரேயா கோஷால்!

ராகுல் டிராவிட்டின் சாதனையை சமன்செய்த ஜடேஜா; எட்டிப் பிடிக்கும் தூரத்தில் சச்சினின் சாதனை!

SCROLL FOR NEXT