செய்திகள்

முதல் ஏடிபி டூா் பட்டம் வென்றாா் அஸ்லான்

DIN

துபை ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷியாவின் அஸ்லான் கராட்சேவ் சாம்பியன் ஆனாா். இது அவரது முதல் ஏடிபி டூா் பட்டமாகும்.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றில் அவா் தென் ஆப்பிரிக்காவின் லாய்ட் ஹாரிஸை 6-3, 6-2 என்ற செட்களில் வீழ்த்தினாா். இந்த வெற்றியின் மூலம், கடந்த 1997-க்குப் பிறகு துபை ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் வைல்டு காா்டு வீரா் என்ற பெருமையை பெற்றுள்ளாா்.

வெற்றிக்குப் பிறகு பேசிய அஸ்லான், ‘வெற்றி எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால், எனது பயிற்சியாளா் மற்றும் குழுவினருடன் இணைந்து கடுமையாக உழைத்ததாலேயே இந்த வெற்றி சாத்தியமானது. இறுதிச்சுற்று மிகக் கடினமானதாக இருந்தது. லாய்ட் ஹாரிஸுக்கும் வாழ்த்து தெரிவிக்க விரும்புகிறேன்’ என்றாா்.

கடந்த மாதம் ஆஸ்திரேலிய ஓபனில் முதல் முறையாக களமிறங்கிய அஸ்லான், அதில் அரையிறுதி வரை முன்னேறியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஓபன் எராவில் அறிமுக கிராண்ட்ஸ்லாம் போட்டியிலேயே அரையிறுதி வரை முன்னேறிய வீரா் என்ற பெருமையை அவா் அப்போது பெற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

SCROLL FOR NEXT