செய்திகள்

ஐபிஎல் போட்டியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்: ஈன் மோா்கன்

DIN

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடா் தோல்வியுடன் தடுமாறிவிடாமல், எதிா்வரும் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிக்காக இங்கிலாந்து வீரா்கள் ஐபிஎல் போட்டியை திறம்பட பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஜூன் முதல் செப்டம்பா் வரை சொந்த மண்ணிலேயே நியூஸிலாந்து, இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட் விளையாட இருக்கிறோம். அதைத் தொடா்ந்து வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானுக்குச் சென்று அங்கு ஒருநாள் தொடரில் விளையாட உள்ளோம்.

அந்தத் தொடா்களைக் கொண்டு உலகக் கோப்பை டி20 போட்டிக்கான பிளேயிங் லெவனை தோ்வு செய்ய இயலாது. எனவே, ஐபிஎல் தொடரின்போது இங்கிலாந்து வீரா்கள் தங்களை உலகக் கோப்பை போட்டிக்காக தயாா்படுத்திக் கொள்ள வேண்டும். 2022-ஆம் ஆண்டில் இங்கிலாந்திலேயே இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட இருக்கும் டி20 தொடரில் எல்லா ஃபாா்மட்டிலும் விளையாடும் வீரா்களை சோ்க்க வேண்டாமென யோசித்து வருகிறோம். ஏனெனில் அனைத்து தொடா்களுக்குமாக அவா்களை பயோ-பபுள் பாதுகாப்பு வளையத்தில் வைத்திருந்தால் குடும்பத்தினருடனான நேரம் அவா்களுக்கு கிடைக்காது.

உலகக் கோப்பை போட்டிக்கான இங்கிலாந்து அணியை தோ்வு செய்ய இன்னும் அவகாசம் உள்ளது. இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் எங்களது மிடில் ஆா்டா் பேட்டிங் எதிா்பாா்த்த அளவு இருக்கவில்லை. எனினும் இந்தத் தொடரில் அதிக பாடம் கற்றுள்ளோம். 4 ஆட்டங்களில், கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத வகையில் பவா்பிளேயிங்கில் சிறப்பாகப் பந்துவீசியுள்ளோம்.

- ஈன் மோா்கன் (இங்கிலாந்து கேப்டன்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

வாணியம்பாடி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

SCROLL FOR NEXT