முகப்பு
செய்திகள்

ஷஃபாலி வர்மா - நெ. 1 டி20 வீராங்கனை

மகளிர் டி20 தரவரிசையில் இந்திய இளம் வீராங்கனை ஷஃபாலி வர்மா மீண்டும் முதல் இடம் பிடித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

மகளிர் டி20 தரவரிசையில் இந்திய இளம் வீராங்கனை ஷஃபாலி வர்மா மீண்டும் முதல் இடம் பிடித்துள்ளார்.

17 வயது ஷஃபாலி கடந்த வருடம் டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்தார். இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராகச் சிறப்பாக விளையாடியதால் நெ.1 இடத்தை மீண்டும் பிடித்துள்ளார்.

ஷஃபாலி இதுவரை 21 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 2 அரை சதங்களுடன் 144.30 ஸ்டிரைக் ரேட்டைக் கொண்டுள்ளார். சமீபத்தில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரு டி20 ஆட்டங்களில் 23, 47 என ரன்கள் எடுத்தார். கடந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைப் போட்டியில் 5 ஆட்டங்களில் 163 ரன்கள் எடுத்து அசத்தினார். இந்திய வீராங்கனைகளில் அதிக ரன்கள் எடுத்தவர் ஷஃபாலி தான். இந்திய வீராங்கனைகளில் மிதாலி ராஜுக்கு அடுத்ததாக முதலிடம் பிடித்த வீராங்கனை என்கிற பெருமையையும் பெற்றார். 
 

முழு கட்டுரையைப் படிக்க →