முகப்பு
செய்திகள்

டி20 தரவரிசை: 4-வது இடத்துக்கு முன்னேறினார் கோலி

​ஐசிசி டி20 தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:50 PM
பகிர்:


ஐசிசி டி20 தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ஐசிசி டி20 தரவரிசை புதன்கிழமை வெளியானது. இங்கிலாந்துடனான கடைசி டி20 ஆட்டத்தில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 52 பந்துகளில் 80 ரன்கள் சேர்த்த விராட் கோலி 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 34 பந்துகளில் 64 ரன்கள் விளாசிய ரோஹித் சர்மா 3 இடங்கள் முன்னேறி 14-வது இடத்தில் உள்ளார். ஷ்ரேயஸ் ஐயர் முதன்முறையாக 26-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

சூர்யகுமார் யாதவ் 66-வது இடத்துக்கும் ரிஷப் பந்த் 69-வது இடத்துக்கும் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார் 21 இடங்கள் முன்னேறி 24-வது இடத்தைப் பிடித்துள்ளார். ஹார்திக் பாண்டியா 47 இடங்கள் முன்னேறி 78-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட்:

முதல் ஒருநாள் ஆட்டத்தில் 98 ரன்கள் விளாசிய ஷிகர் தவான் 2 இடங்கள் முன்னேற்றம் கண்டு 15-வது இடத்தைப் பிடித்துள்ளார். புவனேஷ்வர் குமார் 5 இடங்கள் முன்னேறி 15-வது இடத்தில் உள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →